எதுக்கு ரஞ்சி கோப்பையெல்லாம் வச்சிகிட்டு.. பேசாம அந்த தொடரை ரத்து பண்ணிடுங்க – மனோஜ் திவாரி விரக்தி

Manoj-Tiwary
- Advertisement -

இந்தியாவில் கடந்த 1934-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை போட்டிகளானது இந்திய அணிக்காக வீரர்களை தேர்வு செய்யும் முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 90 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பு ஆண்டிற்கான போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த அணிகளும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டிய கனவில் இருக்கும் வீரர்கள் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது வழக்கம். ஆனால் சமீபகாலமாகவே ஐபிஎல் தொடரின் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கே தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

- Advertisement -

அந்தவகையில் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடிய பலரே இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். அதனை தவிர்த்து ரஞ்சி கோப்பையில் விளையாடி வரும் வீரர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இந்நிலையில் இப்படி எந்த ஒரு பயனும் இல்லாமல் ரஞ்சி கோப்பை தொடரை நடத்த வேண்டாம். அதனை ரத்து செய்து விடுங்கள் என இந்திய வீரர் மனோஜ் திவாரி வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரஞ்சி கோப்பை தொடர் ஒரு பாரம்பரியமான தொடர்.

- Advertisement -

எனவே இந்த தொடரை பாதுகாக்க வேண்டும் என்றால் பல விஷயங்களை சரி செய்ய வேண்டி இருக்கிறது. தற்போது எல்லாம் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு தேசிய அணியில் இடம் கிடைப்பதில்லை. இந்த நிலையை பார்க்கும் போது மிகவும் வருத்தமாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. மேலும் ரஞ்சி தொடரில் நாங்கள் விளையாட செல்லும் மைதானங்கள், வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல்கள் என எதுவுமே முறைப்படி சரியாக நிர்வகிக்கப்படுவதில்லை.

இதையும் படிங்க : அவங்க 2 பேரும் மறுபடியும் டீமுக்கு வந்ததால இந்திய அணி ரொம்ப ஸ்ட்ராங் ஆயிடுச்சி – இயான் சேப்பல் கருத்து

ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடும் வீரர்களின் நிலை மற்றும் அவர்களது கரியர் முன்னேற்றம் போன்ற பல் விடயங்களில் பிசிசிஐ கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் ரஞ்சி கோப்பை தொடர் உயிர்ப்புடன் இருக்கும். அதோடு ரஞ்சி போட்டிகளில் விளையாட வீரர்களும் விருப்பம் காண்பிப்பார்கள் என மனோஜ் திவாரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement