அவங்க 2 பேரும் மறுபடியும் டீமுக்கு வந்ததால இந்திய அணி ரொம்ப ஸ்ட்ராங் ஆயிடுச்சி – இயான் சேப்பல் கருத்து

Ian-Chappell
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஏகப்பட்ட நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அதிக சாதகம் இருப்பதாக தொடரின் ஆரம்பத்திலேயே பேசப்பட்டு வந்தது.

அந்த வகையில் இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான முகமது ஷமி மற்றும் விராட் கோலி ஆகியோர் இல்லாத வேளையில் முதல் போட்டியில் விளையாடிய கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

அதனால் இங்கிலாந்து அணிக்கு பெரிய சாதகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் இரண்டாவது போட்டியில் சுதாரித்த இந்திய அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான அணியில் கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது மீண்டும் இந்திய அணி வலிமையான அணியாக மாறியுள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு மீண்டும் கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் திரும்பியுள்ளதால் மீண்டும் இந்திய அணி வலிமை பெற்றுள்ளது. விராட் கோலி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்பது அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பாக இருந்தாலும் அதனை ஈடு கட்டும் அளவிற்கு தற்போது இந்திய அணியின் பேட்டிங் பலம் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பரான கே.எஸ்.பரத்திற்கு ஓய்வு வழங்க வாய்ப்பு – அப்போ யாரு கீப்பர் தெரியுமா?

ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் பலத்தை மிகைப்படுத்தி பார்க்காமல் குல்தீப் யாதவின் பந்துவீச்சை திறனை அதிகமாக மதிப்பிடுங்கள். அதேபோன்று இந்த தொடரில் கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையின் பலமும் அதிகரிக்கும் என இயான் சேப்பல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement