3 ஆவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பரான கே.எஸ்.பரத்திற்கு ஓய்வு வழங்க வாய்ப்பு – அப்போ யாரு கீப்பர் தெரியுமா?

Bharat
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எஸ் பரத்திற்கு ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான கே.எஸ் பரத் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20 ரன்கள் சராசரி உடன் 221 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அதோடு இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது விக்கெட் கீப்பிங் ஓரளவு சுமாராக இருந்தாலும் பேட்டிங்கில் இன்னும் அவர் பெரிய அளவில் எந்த ஒரு செயல்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேலுக்கு மூன்றாவது போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே ரிஷப் பண்ட் விபத்து காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய வேளையில் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக மாறி மாறி விளையாடி வந்தனர்.

- Advertisement -

ஆனால் சமீபத்தில் கே.எல் ராகுல் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் முழு நேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடப்போவதாக அறிவித்ததால் கே.எஸ் பரத்திற்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனாலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக கிடைத்த முதல் இரண்டு போட்டியிலும் அவர் அந்த வாய்ப்பை வீணடித்தார்.

இதையும் படிங்க : என்மேல நம்பிக்கை வச்சி என்னை தேர்வு செய்த அவங்களுக்கு நன்றி.. இளம்வீரர் ஆகாஷ் தீப் நெகிழ்ச்சி

இப்படி தொடர்ச்சியாக தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வரும் அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேலுக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement