என்மேல நம்பிக்கை வச்சி என்னை தேர்வு செய்த அவங்களுக்கு நன்றி.. இளம்வீரர் ஆகாஷ் தீப் நெகிழ்ச்சி

Akash-Deep
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான எஞ்சியுள்ள கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் இந்த தொடருக்கான எஞ்சியுள்ள கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியும் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ மூலம் அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் இடம்பெற்றது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது.

ஐபிஎல் தொடரில் கடந்த 2022-ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக அறிமுகமான ஆகாஷ் தீப் ஐபிஎல் தொடரில் பெரியளவில் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் உள்ளூர் போட்டிகளில் பெங்கால் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அதுமட்டும் இன்றி இந்தியா ஏ அணிக்காகவும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு தென்னாப்பிரிக்க தொடரின் போதே இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவருக்கு அந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வாகியுள்ள அவருக்கு நிச்சயம் இந்த மூன்று போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஆகாஷ் தீப் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டதை நினைத்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

நான் சிறப்பாக செயல்பட்டதை தேர்வுக்குழுவினர் பார்த்திருக்கின்றனர். அவர்களது பார்வை என் மீது விழுந்ததாலே தற்போது நான் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்து விளையாடிய போது சிறப்பாக பந்து வீசியதோடு பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டேன். தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். அந்த வகையில் தற்போது அந்த கனவு எனக்கு நனைவாக போவதில் மிகவும் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : தோனியை விட எங்களோட அந்த இங்கிலாந்து வீரர் தான் பெஸ்ட்.. அலெக் ஸ்டீவர்ட் அதிரடியான பேட்டி

என்மீது நம்பிக்கை வைத்து என்னை தேர்வு செய்த தேர்வுக்குழுவினருக்கும், நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் உள்ளூர் போட்டிகளில் எவ்வாறு என்னால் சிறப்பாக செயல்பட முடிந்ததோ அதேபோன்று இந்திய அணிக்காகவும் எனது முழு பங்களிப்பை வழங்கி இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவேன் என ஆகாஷ் தீப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement