ஷிவம் துபே அவுட்டாகாம 63 ரன் அடிச்சும், அக்சர் படேல் ஆட்டநாயகன் விருதினை பெற்றது ஏன்? – காரணம் இதோ

Axar-and-Dube
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று ஜனவரி 14-ம் தேதி இந்தூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது முதல் போட்டியை தொடர்ந்து இந்த இரண்டாவது போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரினை இரண்டுக்கு பூஜ்யம் (2-0)என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து 20 ஓவர்களின் முடிவில் 172 ரன்கள் குவித்தது. பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே 32 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிபெற செய்தார். அதேபோன்று பந்துவீச்சிலும் அவர் 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அனைவருமே ஷிவம் துபேவிற்கே ஆட்டநாயகன் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் வித்தியாசமாக அக்சர் படேலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருந்தது. இப்படி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என ஷிவம் துபே அசத்தியிருந்தும் அக்சர் பட்டேலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது ஏன்? என்ற கேள்வியும் எழுந்தது.

- Advertisement -

இந்நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நாம் பார்த்தால் : அக்சர் படேல் பந்துவீச்சின் போது மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளார். அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இந்திய அணியின் மற்ற பந்துவீச்சாளர்களை ஓவருக்கு குறைந்தது 8 ரன்கள் சராசரியுடன் அடித்து ஆடியிருந்த வேளையில் அக்சர் படேல் மட்டும் 4 ஓவர்களை வீசி வெறும் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதையும் படிங்க : நல்லா போகும் இந்திய அணியில் இப்போதைக்கு அவர் தான் கவலையை கொடுக்குறாரு.. டிகே அதிருப்தி பேட்டி

அதிலும் குறிப்பாக ஒரு ஓவருக்கு 4.20 ரன்களை மட்டுமே அவர் சராசரியாக விட்டுக் கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி ரவீந்திர ஜடேஜாவிற்கு அடுத்ததாக இடதுகை சுழற்பந்து வீச்சாளராக டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரராக 200 டி20 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாகவே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement