நல்லா போகும் இந்திய அணியில் இப்போதைக்கு அவர் தான் கவலையை கொடுக்குறாரு.. டிகே அதிருப்தி பேட்டி

Dinesh Karthik 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே 2 – 0* என்ற கணக்கில் கோப்பையை வென்று தங்களை உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணி என்பதற்கு அடையாளமாக செயல்பட்டு வருகிறது.

முன்னதாக இந்தூரில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயம் செய்த 173 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 68 மற்றும் சிவம் துபே 63* ரன்கள் விளாசி எளிதாக வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இருப்பினும் அப்போட்டியில் 14 மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 29 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

சுமாரான கேப்டன்:
ஆனால் அவரை விட கேப்டனாக விளையாடும் ரோஹித் சர்மா முதல் போட்டியில் ரன் அவுட்டாகி 2 பந்துகளில் டக் அவுட்டான நிலையில் இந்த போட்டியிலும் முதல் பந்திலேயே கிளீன் போல்ட்டாகி கோல்டன் டக் அவுட்டானார். சமீப காலங்களாகவே டி20 கிரிக்கெட்டில் திண்டாடி வரும் கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார்.

அந்த நிலையில் இப்போட்டியில் டக் அவுட்டான அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான ஆசிய என்ற பரிதாப சாதனை படைத்துள்ளார். இத்தனைக்கும் டி20 கேரியர் முடிந்ததாக செய்திகள் வெளியான நிலையில் 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய அவர் இனிமேல் 20 ஓவர் போட்டிகளிலும் மிரட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் மீண்டும் முன்னேற்றத்தை காணாமல் தடுமாறும் ரோஹித் சர்மாவுக்கு போட்டிக்கு பாண்டியா இருப்பதால் 2024 ஐபிஎல் தொடரில் அசத்தினால் மட்டுமே உலகக் கோப்பையில் கேப்டனாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போதைய இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா மட்டுமே கவலையளிக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலையில் அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: அந்த இளம் வீரரை 2024 டி20 உ.கோ அணியில் எடுக்கலான அது நியாயமே இல்ல.. ரெய்னா கருத்து

“இந்த தொடரில் இந்தியாவின் ஒரே தோல்வியாக கேப்டன் இருக்கிறார். 2 போட்டிகளில் 2 டக் அவுட்டான அவர் அதைப் பற்றி பெரிய அளவில் கவலைப்படமாட்டார். ஏனெனில் நீண்ட காலம் கழித்து டி20 கிரிக்கெட்டில் விளையாடும் அவர் கேப்டனாக உள்ளார். ஆனால் முதல் போட்டியில் ரன் அவுட்டான அவர் இந்த போட்டியில் பெரிய ஷாட் அடிக்க முயற்சித்து ஸ்டம்ப்புகளை இழந்தார்” என்று கூறினார்.

Advertisement