அந்த இளம் வீரரை 2024 டி20 உ.கோ அணியில் எடுக்கலான அது நியாயமே இல்ல.. ரெய்னா கருத்து

Suresh Raina 5
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது. குறிப்பாக ஜனவரி 14ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற 2வது போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இந்தியா 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் தொடர்ந்து அசத்தி வருகிறது.

இந்தூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயம் செய்த 173 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். இருப்பினும் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 68 ரன்களும் மிடில் ஆர்டரில் கடைசி வரை அவுட்டாகாமல் சொல்லி அடித்த சிவம் துபே 63* ரன்களும் எடுத்து இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

வாய்ப்பு கொடுங்க:
இந்நிலையில் இப்போட்டியை போல தொடர்ந்து அசத்தும் ஜெய்ஸ்வால் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அது நியாயமற்றதாக இருக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். குறிப்பாக கில்லை விட ஜெய்ஸ்வால் அசத்துவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்யும் விதத்திற்கு நீங்கள் அவரை உலகக் கோப்பையில் தேர்வு செய்யாவிட்டால் அது நியாயமற்றதாக இருக்கும்”

“சில நேரங்களில் நீங்கள் தவிர்க்க முடியாத வீரராக இருப்பீர்கள். பெரிய ரன்களை அடிக்கும் அவர் அணிக்கு தேர்வு செய்யக்கூடியவராக இருக்கிறார். சொல்லப்போனால் அவர் சுப்மன் கில்லை மிஞ்சியுள்ளார். அவரை நீங்கள் தற்போது தொட முடியாது. இது போல பேட்டிங் செய்யும் ஒருவர் தான் உங்களுக்கு தேவை. இல்லையென்றால் 2022 டி20 உலகக் கோப்பை போல அதே பழைய கதை அதே பழைய ஸ்டைலில் தான் இம்முறையும் இந்தியா விளையாடும்” என்று கூறினார்.

- Advertisement -

அதே நிகழ்ச்சியில் இருந்த சுரேஷ் ரெய்னா அந்த கருத்தை ஏற்றுக்கொண்டு பேசியது பின்வருமாறு. “இவரின் பணி ஒழுக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஒழுக்கமான குணத்தை கொண்டுள்ள இவர் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடுவதற்கு தயங்குவதில்லை. அதே எண்ணத்துடன் தான் டி20 உலகக் கோப்பையிலும் அவர் விளையாடுவார்”

இதையும் படிங்க: ஷிவம் துபே பந்துவீசும் போது ரோஹித் சர்மா சொன்ன இந்த விஷயத்தை கவனிசீங்களா? – பாண்டியாவுக்கு ஆப்பு தான்

“இங்கே நல்ல செய்தி என்னவெனில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஏற்கனவே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் அங்கே டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்துள்ளார்” என்று கூறினார். முன்னதாக 2023 ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரை சதமடித்து 625 ரன்கள் குவித்து இந்தியாவுக்காக அறிமுகமான ஜெய்ஸ்வால் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாக் அவுட் போட்டியில் சதமடித்து தங்கப்பதக்கம் வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement