ஷிவம் துபே பந்துவீசும் போது ரோஹித் சர்மா சொன்ன இந்த விஷயத்தை கவனிசீங்களா? – பாண்டியாவுக்கு ஆப்பு தான்

Shivam-Dube
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று இந்தூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 172 ரன்கள் குவிக்க பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணி முதலில் பந்து வீசுகையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபே 3 ஓவர்கள் பந்துவீசி 36 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

இந்த போட்டியில் அவரது பந்துவீச்சில் நிறைய ரன்கள் கசிந்து கொண்டிருக்கும் வேளையில் கூட கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு அளித்த ஆதரவு தற்போது இணையத்தில் அதிக அளவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தில் ஈர்த்துள்ளது. மேலும் துபே பந்துவீசி கொண்டிருக்கையில் தொடர்ச்சியாக ரோகித் சர்மா கத்துக் கொண்டே இருந்த விஷயம் அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

அதாவது ஷிவம் துபே பந்துவீச ஓடிவரும்போதெல்லாம் “உன்னால் நன்றாக பந்து வீச முடியும்”, “நீ ஒரு நல்ல பவுலர்”, “கவலைப்படாமல் பவுலிங் போடு” என்பது போல தொடர்ச்சியாக அவரை ஆதரித்து ரோகித் சர்மா கத்திக் கொண்டிருந்தார். பொதுவாகவே எந்த ஒரு பவுலரையும் ஓடி வந்து பந்துவீசும் போது இப்படி ரோகித் சர்மா ஆதரித்து நாம் பார்த்ததில்லை.

இதையும் படிங்க : நிறைய கத்துக்கிட்டேன்.. அவரோட பேட்டிங் செஞ்சது கெளரவமா இருக்கு.. ஜெய்ஸ்வால் உற்சாக பேட்டி

இதற்கு மறைமுகமாகவும் ஒரு காரணம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதாவது அடிக்கடி காயத்தை சந்தித்து வெளியேறும் ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக சிவம் துபேவை ஆறாவது பந்துவீச்சாளராக பயன்படுத்துவதற்காக தான் ரோகித் சர்மா இப்படி அவருக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருவதாக தெரிகிறது.

Advertisement