நிறைய கத்துக்கிட்டேன்.. அவரோட பேட்டிங் செஞ்சது கெளரவமா இருக்கு.. ஜெய்ஸ்வால் உற்சாக பேட்டி

Yashasvi Jaiswal
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஜனவரி 14ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியிலும் வென்ற இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளால் 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானை மிகவும் எளிதாக தோற்கடித்துள்ளது.

முன்னதாக இந்தூரில் நடைபெற்ற 2வது போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 173 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா டக் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த விராட் கோலி அதிரடியாக விளையாடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக செயல்பட்டு 68 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி அவுட்டானார்.

- Advertisement -

கெளரவ பார்ட்னர்ஷிப்:
மறுபுறம் மிடில் ஆர்டரில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய சிவம் துபே 63* ரன்கள் விளாசி 15.3 ஓவரிலேயே இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது தமக்கு கிடைத்த கௌரவமான வாய்ப்பு என்று யசஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

மேலும் விராட் கோலியிடம் நிறைய நுணுக்கங்களை கற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “இந்த போட்டியில் களத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் விளையாடினேன். குறிப்பாக விராட் பையாவுடன் பேட்டிங் செய்தது சிறந்த தருணமாகும். அவருடன் சேர்ந்து பேட்டிங் செய்தது கௌரவமாகும். அவரிடம் நான் நிறையவற்றைக் கற்றுக் கொள்ளலாம். நாங்கள் சேர்ந்து பேட்டிங் செய்யும் போது எங்கே அடிக்கலாம் என்பது பற்றி பேசினோம்”

- Advertisement -

“பின்னர் லாங் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசைக்கு மேல் எளிதாக அடிக்கலாம் என்று நாங்கள் முடிவு செய்து அடித்தோம். அந்த வகையில் எங்களுடைய அதிரடியாக விளையாடும் எண்ணம் நேர்மறையாக இருந்ததால் நாங்கள் நல்ல ஷாட்டுகளை அடிக்க முயற்சித்தோம். களத்திற்கு சென்று என்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு அணி நிர்வாகம் என்னிடம் சொன்னார்கள்”

இதையும் படிங்க: காட்டுக்கு ராஜாவான விராட் கோலியை.. 180 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடவெச்சு வீணடிக்காதீங்க.. எச்சரித்த முன்னாள் வீரர்

“வலைப் பயிற்சிகளில் கடினமாக உழைக்கும் நான் இது போல் கிடைக்கும் வாய்ப்புகளில் என்னுடைய சிறந்த செயல்பாட்டை கொடுக்க விரும்புகிறேன். இந்த போட்டியில் பனியின் தாக்கம் இருந்த போது இரண்டாவதாக பேட்டிங் செய்த முடிவு நல்லதாக அமைந்தது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் கடைசி போட்டி ஜனவரி 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement