IND vs ENG : 5 ஆவது டெஸ்ட் போட்டியில் அஷ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட இதுதான் காரணமாம் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று ஜூலை 1-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி முதல் நாளான இன்று தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவிய வேளையில் இந்த போட்டியில் தமிழக சுழற்ப்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ashwin 1

- Advertisement -

இப்படி அஷ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதை அறிந்ததும் தமிழக ரசிகர்களிடையே இந்த விடயம் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்திய அணிக்காக சமீப காலமாகவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவர் ஓரங்கட்டப்பட்டு வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்மை சூழற்பந்துவ வீச்சாளராக அணியில் இடம் பெற்று விளையாடுகிறார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக விரைவாக அதிக விக்கெட்டுகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இவருக்கு இதுபோன்று இடையிடையே வாய்ப்பு மறுக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் அஸ்வின் நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளராக ஜடேஜாவிற்கும் இடம் கிடைத்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அஸ்வின் ஏன் சேர்க்கப்படவில்லை என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இங்கிலாந்து மைதானங்கள் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருக்கும் என்று நாம் அனைவரும் அறிந்ததே.

Ashwin-Jadeja

அதன்படி மைதானத்தின் தன்மையை கணக்கில் கொண்டு இந்திய அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற கூட்டணியோடே இந்திய அணி களம் இறங்க திட்டமிட்டது. அதோடு போட்டி நடைபெறும் இந்த எட்ஜ்பேஸ்டன் மைதானம் ஈரப்பதத்துடன் இருப்பதினால் அதிக அளவு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தான் கை கொடுக்கும் என்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

எனவே அணிக்கு ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டும் போதும் என்கிற அடிப்படையில் பேட்டிங் நன்கு தெரிந்த ஆல்ரவுண்டான ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனாலேயே அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் பேட்டிங்கிலும் கைகொடுக்க வேண்டும் என்பதன் காரணமாக ஷர்துல் தாகூர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : 37 வயதில் இந்திய அணியின் கேப்டன் ஆனார் நம்ம தினேஷ் கார்த்திக், எப்படி இது சாத்தியம் – முழுவிவரம் இதோ

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ஜடேஜா தான் களமிறங்கினார். அப்போதே அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement