2 ஆண்டுகள் 2 பேரின் மூலம் கேப்டன் பொறுப்பிற்காக பட்டை தீட்டப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் – என்ன நடந்தது?

Ruturaj
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒரு சில தினங்களுக்கு முன்னதாக கோப்பைக்கான அறிமுக விழாவின் போது சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி தனது பதவியில் இருந்து விலகுவதாகவும் சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ருதுராஜ் தலைமையில் விளையாடி வரும் சிஎஸ்கே அணியானது தங்களது முதல் 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படி ருதுராஜ் கெய்க்வாட் திடீரென சிஎஸ்கே அணியின் கேப்டனாக மாறியது குறித்து பலரும் பல்வேறு கேள்விகளை முன்னெழுப்பி வந்தனர். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் திடீரென கேப்டனாக மாற்றப்படவில்லை என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரை கேப்டனாக செயல்பட முன்னாள் கேப்டன் தோனி மெருகேற்றி வந்திருக்கிறார் என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மேலும் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கும் கடந்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கேப்டன்சி பயிற்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஜடேஜாவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டு பின்னர் மீண்டும் பறிக்கப்பட்டது.

அதன்பின்னர் மீண்டும் தோனி கேப்டன் பதவிக்கு திரும்பயதிலிருந்தே ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன்சி குறித்து தோனி தொடர்ந்து பேசி வந்தாராம். மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து உனக்கு கேப்டன்சி வாய்ப்பு கிடைக்கும். அதனால் இப்போதே தயாராக இரு என்றும் ருதுராஜிடம் தோனி கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதோடு ஒவ்வொரு போட்டியின் பின்னரும் கேப்டன்சி குறித்த பல்வேறு அறிவுரைகளை அவருக்கு வழங்கி மெருகேற்றி உள்ளார். அதேபோன்று சென்னை அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்கும் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் அந்த போட்டியின் முடிவுகளுக்கு பின்னர் நீங்கள் கேப்டனாக இருந்தால் என்னென்ன முடிவு செய்திருப்பீர்கள்? என்னென்ன திட்டங்களை வைத்திருப்பீர்கள்? என்று ருதுராஜ் கெய்க்வாட்டிடம் சோதனை வைத்துள்ளார்.

இதையும் படிங்க : இவ்வளவு அனுபவம் இருந்தும்.. விராட் கோலி அந்த இடத்துல பண்ணது தப்பு தான்.. சேவாக் கருத்து

அந்த சோதனைகளில் எல்லாம் ருதுராஜ் சிறப்பான முடிவுகளை தெரிவித்துள்ளார். அதனால் பிளம்மிங்-க்கும் அவரது கேப்டன்சியின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இப்படி தோனி மற்றும் பிளமிங் ஆகிய இருவரின் கண்காணிப்புக்கு பிறகே ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement