இவ்வளவு அனுபவம் இருந்தும்.. விராட் கோலி அந்த இடத்துல பண்ணது தப்பு தான்.. சேவாக் கருத்து

Virat Kohli 5a
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 போட்டிகளில் 1 வெற்றியை மட்டும் பெற்று 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் திணறும் அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தனைக்கும் அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 5 போட்டிகளில் 316* ரன்கள் குவித்துள்ளார்.

அதனால் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள அவர் ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார். ஆனால் கிளன் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் போன்ற இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் விராட் கோலியின் போராட்டம் பெங்களூருவின் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை. முன்னதாக இவ்வளவு ரன்கள் அடிக்கும் விராட் கோலி அதை அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுக்கத் தவறுவதே பெங்களூருவின் தோல்விக்கு காரணமாக அமைவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

சேவாக் அதிருப்தி:
குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேப்டன் டு பிளேஸிஸ் உடன் சேர்ந்த விராட் கோலி 125 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். இருப்பினும் தடுமாற்றமாக விளையாடிய டு பிளேஸிஸ் அவுட்டானதும் வந்த மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் ஆகியோர் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. மறுபுறம் நிதானமாகவே விளையாடிய விராட் கோலி 113* (72) ரன்கள் குவித்து 183 ரன்களை இலக்காக நிர்ணயிக்க உதவினார்.

இருப்பினும் 67 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு ஐபிஎல் வரலாற்றின் மெதுவான சதத்தை பதிவு செய்த அவர் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடவில்லை. அதனால் எக்ஸ்ட்ராவாக 20 ரன்கள் எடுக்கத் தவறியது பெங்களூருவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் அப்போட்டியில் மிகப்பெரிய அனுபவம் கொண்ட விராட் கோலி நல்ல துவக்கத்தை பெற்றும் கடைசியில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஃபினிஷிங் செய்யத் தவறியதாக வீரேந்திர சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆர்சிபி 20 ரன்கள் குறைவாக எடுத்ததாக நான் கருதினேன். விராட் கோலியின் இன்னிங்ஸ் சிறப்பானது. ஆனால் அவருக்கு யாரும் சப்போர்ட் செய்யவில்லை. தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய வரவில்லை. அதிரடியாக விளையாடுபவர்களும் அவருக்கு உதவி செய்யவில்லை”

இதையும் படிங்க: கடைசி வரை வராத ஹஸரங்கா.. ஹைதெராபாத் வாங்கிய 22 வயது தமிழ் வீரர்.. யார் இந்த விஜயகாந்த்

“இருப்பினும் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் அதிகரித்திருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் 39 பந்துகளில் 50 ரன்கள் கடந்து நன்கு செட்டிலான பின் வேகமான ரன் ரேட்டில் விளையாட வேண்டும். அதை செய்தாலே உங்களுடைய ஸ்ட்ரைக் ரேட் கடைசியில் தாமாக 200 தொட்டு விடும். எனவே அந்த இடத்தில் கண்டிப்பாக விராட் கோலி தவறு செய்தார்” என்று கூறினார்.

Advertisement