கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டிற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது – வெளியான டாக்டரின் ரிப்போர்ட்

rishabh-pant-medical-report
- Advertisement -

இது அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்ட கார் விபத்து குறித்த தகவலே தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது என்று கூறலாம். ஏனெனில் 25 வயதான மேட்ச் வின்னராக பார்க்கப்படும் ரிஷப் பண்ட் அண்மையில் நடைபெற்று முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கூட தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். இப்படி மிகச் சிறப்பான ஒரு இளம்வீரர் சாலை விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சை பெற்று வருவது அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம்பெறாத ரிஷப் பண்ட் தனது குடும்பத்தாருடன் புத்தாண்டை கொண்டாட முடிவெடுத்து அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது நாம் அறிந்ததே. அதுமட்டுமின்றி அவர் விபத்தில் சிக்கிய சில வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் உண்மையில் அவருக்கு என்னென்ன பாதிப்புகள் உடம்பில் ஏற்பட்டுள்ளன என்பது குறித்த மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் பிரத்தியேகமாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரின் பேட்டி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இன்று அதிகாலை விபத்திற்குள்ளான ரிஷப் பண்ட் அங்கிருந்தவர்களின் உதவியின் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கு நடைபெற்ற முதலுதவி சிகிச்சைகளுக்கு பின்னர் தற்போது ரிஷப் பண்ட் டேராடூனில் உள்ள மேக்ஸ் ஹாஸ்பிடல் என்கிற பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு சிகிச்சை கொடுத்து வரும் சுசில் நாகர் என்கிற மருத்துவர் வெளியிட்ட தகவலின் படி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் தற்போது ஆபத்தான நிலையில் இருந்து வெளியே வந்து விட்டதாகவும், அவர் தற்போது நலமாக இருக்கிறார் என்றும் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரிஷப் பண்டிற்கு நெற்றி மற்றும் காலில் அடிபட்டுள்ளது.

- Advertisement -

அதேபோன்று அவருக்கு நாங்கள் எடுத்த எக்ஸ்-ரேவில் அவரது உடலில் எந்தவித எலும்பு முறிவும் ஏற்படவில்லை. அதே போன்று கார் பற்றி எறிந்தாலும் உடனடியாக அவர் காரில் இருந்து வெளியேறியதால் உடம்பில் எந்த வித தீக்காயமும் ஏற்படவில்லை. ஆனால் கார் தரையில் உருண்டபோது அவருக்கு முதுகுப் பகுதியில் சிராப்புகள் ஏற்பட்டுள்ளன. அதேபோன்று அவரது காலிலும் லெகமன்ட்டியர் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் அதிகாரவபூர்வ தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : பற்றி எறியும் கார். தரையில் ரத்த காயத்துடன் படுத்து கிடக்கும் ரிஷப் பண்ட் – வைரலாகும் வீடியோ

ஏற்கனவே வெளியான சில தகவல்களில் ரிஷப் பண்ட்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் அவருக்கு பலத்த அடிபட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்த வேளையில் அவைகள் எல்லாம் பொய்யான தகவல் என்றும் ரிஷப் பண்ட்க்கு எலும்பு முறிவோ, தீக்காயமோ எதுவும் ஏற்படவில்லை என்றும் விபத்தினால் ஏற்பட்ட காயங்கள் மேலே குறிப்பிடப்பட்டவை மட்டும் தான் என்று டாக்டர் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement