பற்றி எறியும் கார். தரையில் காயத்துடன் படுத்து கிடக்கும் ரிஷப் பண்ட்

rishabh-pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் வீரரான ரிஷப் பண்டிற்கு ஏற்பட்ட கார் விபத்து குறித்தே இன்று காலையில் இருந்து பல்வேறு செய்திகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் பயணித்த ரிஷப் பண்ட் தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு நாடு திரும்பினார்.

பின்னர் இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியுடன் துபாயில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முடித்து மீண்டும் டெல்லி திரும்பிய ரிஷப் பண்ட் தனது காரில் புத்தாண்டினை வரவேற்று கொண்டாட தனது வீட்டிற்கு திரும்பினார். தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட நினைத்த அவருக்கு நேர்ந்த இந்த சம்பவம் அனைவர்து மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதன்படி இன்று அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற ரிஷப் பண்டின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி நிலை குலைந்தது. இதன் காரணமாக உடனடியாக கார் தீ பிடித்து எரியவே சுதாரித்துக் கொண்ட ரிஷப் பண்ட் காரில் இருந்து காயங்களுடன் வெளியே வந்து விட்டார்.
Rishabh pant car accident:

பின்னர் அங்கிருந்த பொதுமக்களின் உதவி மூலம் ஆம்புலன்ஸ் மூலமாக அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் வேளையில் ரிஷப் பண்ட் கார் விபத்து நடந்தது குறித்த இரண்டு வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன.

- Advertisement -

அதில் ஒன்று சாலையில் செல்லும் மற்றொரு பயணி ரிஷப் பண்ட் கார்தான் எரிகிறது என்று தெரியாமல் அதனை வீடியோவாக பிடித்து வெளியிட்டுள்ளார். மற்றொன்று கார் சாலையில் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அங்கு யாராவது இருப்பார்களா? என்று காப்பாற்ற சென்ற நபர் ரிஷப் பண்ட் படுத்து கிடப்பதை வீடியோவாக எடுத்துள்ளார்.

இதையும் படிங்க : அவர் உயிர் தப்பியதே கடவுள் புண்ணியம் தான். கார் விபத்திற்கு என்ன காரணம் – போலீசார் சார்பில் வெளியான தகவல்

இந்த இரண்டு வீடியோவும் தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த இரண்டு வீடியோவும் விபத்து பகுதியில் எடுக்கப்பட்ட உண்மையான வீடியோ என்பது உறுதியாகி உள்ளது.

Advertisement