அவர் உயிர் தப்பியதே கடவுள் புண்ணியம் தான். கார் விபத்திற்கு என்ன காரணம் – போலீசார் சார்பில் வெளியான தகவல்

Rishabh-Pant-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இன்று அதிகாலை கார் விபத்தில் சிக்கியது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைவரது மத்தியிலும் பெரிய அளவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் கார் விபத்திற்குள்ளான தகவல் குறித்து பல்வேறு செய்திகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வரும் வேளையில் ரூர்கீ என்கிற நகரில் உள்ள மங்களூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக காவல்துறை ரிப்போர்ட் பதிவாகியுள்ளது.

விபத்திற்கு பிறகு ரிஷப் பண்டிற்கு கால் மற்றும் தலைப்பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், முதுகில் பெரிய அளவில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு கார் விபத்திற்கு உள்ளானதற்கு அடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த கார் விபத்து எப்படி நடந்தது? என்ன ஆனது? என்பது குறித்து தற்போது ஹரித்வார் சீனியர் சூப்பர்டன்ட் போலீஸ் போலீஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமான சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி போலீசார் தரப்பில் வெளியான தகவலின் படி :

ரிஷபண்ட் தனது மெர்சிடஸ் பென்ஸ் காரில் பயணித்துள்ளதாகவும் அப்படி அவர் பயணித்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரின் மோதி தீப்பிடித்து எரிந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த கார் விபத்து நடைபெற்ற பகுதி தேசிய நெடுஞ்சாலை எனவும் அதிகாலை ஐந்து முப்பது (5.30) மணிக்கு இந்த விபத்து நடைபெற்றுள்ளதாகவும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

- Advertisement -

இதுகுறித்து போலீசார் தரப்பில் வெளியான அறிக்கையில் : கார் விபத்திற்குள்ளாகி தீப்பிடித்து எறிந்ததும் அதிலிருந்து ரிஷப் பண்ட் தப்பித்தது கடவுளின் புண்ணியம் தான் என்றும் அவரது கார் தீப்பிடித்து எறிய துவங்கியதை கணித்ததும் பண்ட் உடனடியாக ஜன்னல் கதவு வழியாக எப்படியோ வெளியேறி தன்னை காத்துக் கொண்டார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : டெல்லி டூ உத்தரகான்ட் காரில் தனியாக பயணம் ஏன்? கார் விபத்திற்கு முன் ரிஷப் பண்ட் பிளான் என்ன?

அது மட்டுமின்றி இப்படி கார் விபத்து நடைபெறுவதற்கு காரணம் : ரிஷப் பண்ட் அதிகாலையில் அதிவேகமாக பயணித்ததும் அதோடு அந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பனிமூட்டமும் முக்கிய காரணமாக போலீசார் கூறுகின்றனர். இப்படி பனிமூட்டமாக இருந்த தேசிய நெடுஞ்சாலையில் அவர் அதிவேகத்தில் பயணித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நடைபெற்றதாக போலீசார் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement