டெல்லி டூ உத்தரகான்ட் காரில் தனியாக பயணம் ஏன்? கார் விபத்திற்கு முன் ரிஷப் பண்ட் பிளான் என்ன?

Rishabh-Pant
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இன்று அதிகாலை சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தற்போது சமூக வலைதளத்தை ஆக்கிரமிக்கும் செய்தியாக இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வங்கதேச நாட்டில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்ற ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். ஆனாலும் ஒருநாள் மட்டும் டி20 கிரிக்கெட்டில் அவரது மோசமான செயல்பாடு காரணமாகவே அடுத்த இலங்கை அணிக்கு எதிராக நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த இலங்கை தொடரில் அவர் சேர்க்கப்படாததன் காரணமாக வங்கதேசத்திலிருந்து நாடு திரும்பிய அவர் டெல்லியில் இருந்து உத்தரகாண்டில் இருக்கும் தனது இல்லத்திற்கு ஓய்வுக்காக செல்ல இருந்தார். இதன் காரணமாக டெல்லியில் இருந்து தனது BMW காரில் புறப்பட்ட ரிஷப் பண்ட் டேராடூன் ஹைவே சாலையில் சென்று கொண்டிருக்கும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

- Advertisement -

கார் தடுப்பு சுவரின் மீது இடித்த பின்னர் தீப்பிடித்து எரிந்ததாகவும் அதற்கு முன்னதாகவே சுதாரித்து கொண்டு காரில் இருந்து ரிஷப் பண்ட் காயத்துடனே எப்படியோ வெளியே வந்ததால் பெரிய விபத்தில் இருந்து அவர் தப்பினார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதேபோன்று இந்த கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்க்கு முதுகு மற்றும் தலைப்பகுதிகளில் பலத்த அடிபட்டுள்ளதாகவும், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படி அவர் அடிபட்டு ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்ப வேண்டும் என்று தங்களது பிரார்த்தனைகளை முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ரிஷப் பண்ட் இப்படி டில்லி டூ உத்தரகாண்ட் வரை தனியாக காரில் பயணிப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறாததால் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும், புத்தாண்டுக்கு முன்னதாக தனது குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நேரில் செல்ல முடிவெடுத்து அவர் தனது காரில் தனியாக பயணப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : கார் விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் அதிர்ச்சி சோகம், நடந்தது இதோ

அணியில் தேர்வாகாத இந்த சிறிய இடைவெளியின் தனது ஓய்வுக்காகவும், புத்தாண்டு வரவிருக்கும் ஒரு மகிழ்ச்சியான நேரத்தில் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று வீட்டிற்கு சென்ற இவருக்கு நேர்ந்த இந்த விபத்து அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement