WTC Final : நியாயமாக சுப்மன் கில் அவுட்டா? இல்லையா? – எந்த ரூல்ஸ் படி இந்த முடிவு எடுக்கப்பட்டது தெரியுமா?

Green-and-Umpire
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் 7-ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இந்த போட்டி இன்று கடைசி நாள் ஆட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 280 ரன்கள் அடித்தால் வெற்றி பெறும் என்ற நிலையில் இருக்கும் வேளையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்பதை அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

IND vs AUS

- Advertisement -

நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் 270 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து 444 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் தற்போது தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்திருந்தது. இந்நிலையில் இந்த இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் ஆட்டமிழந்த விதம் நேற்றிலிருந்து பெருமளவில் பேசப்படும் விடயமாக இருந்து வருகிறது.

ஏனெனில் நேற்றைய போட்டியில் 19 பந்துகளை சந்தித்த அவர் 18 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அப்படி அவர் ஆட்டம் இழந்த விதம்தான் தற்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏனெனில் சுப்மன் கில் கொடுத்த கேட்சை ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் பிடிக்கும் போது பந்து தரையில் பட்டது. இருப்பினும் மூன்றாவது அம்பயர் அதனை பலமுறை சோதித்து விட்டு அவுட் என்று அறிவித்தார்.

Cameron Green

இதனைக் கண்ட இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரும், ரசிகர்களும் இந்த விக்கெட் சரியானது கிடையாது என்று தங்களது அதிருப்தியை சமூக வலைதளம் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பந்து தரையில் படும்படி இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து அம்பயர்கள் செய்தது தவறு என்றும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் எந்த விதிமுறைப்படி சுப்மன் கில்லுக்கு அவுட் என்ற முடிவு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்த சில தகவல்களை இங்கு காணலாம். அதன்படி எம்.சி.சி 33.3 விதியின்படி பந்து பீல்டரின் கைக்கு வரும்போது பீல்டர் கேட்ச் பிடித்திருந்தால் கைவிரல்கள் பந்தை வெளியே செல்லாதபடி வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது அவுட் என்று அறிவிக்கப்படும். அதேபோன்று 33.2.2.1 என்கிற விதிமுறைப்படி : பந்து கேட்ச் பிடிக்கப்பட்ட பிறகு ஏதாவது ஒரு பகுதி தரையில் பட்டாலும் பந்து கைக்குள் இருந்தால் அது அவுட் என்றும் அறிவிக்கப்படும்.

இதையும் படிங்க : WTC Final : இதுவே அவரா இருந்தா கேட்ச் கொடுத்திருக்க மாட்டீங்க, பாண்டிங் சொன்னா கேட்பாங்க – அம்பயரை கலாய்த்த ரவி சாஸ்திரி

அந்த வகையில் தான் கேமரூன் கிரீன் பந்தை கீழே விழாமல் பிடித்தபோது இரண்டு விரல்களுக்கு இடையே நடுவில் இருந்த பந்து தரையில் பட்டாலும் அவர் முழு கண்ட்ரோலுடன் இருந்ததால் 33.2.2.1 விதிமுறைப்படி சுப்மன் கில்லுக்கு அவுட் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement