WTC Final : இதுவே அவரா இருந்தா கேட்ச் கொடுத்திருக்க மாட்டீங்க, பாண்டிங் சொன்னா கேட்பாங்க – அம்பயரை கலாய்த்த ரவி சாஸ்திரி

- Advertisement -

இங்கிலாந்து லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் மாபெரும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 444 ரன்கள் துரத்தி வரும் இந்தியா 4வது நாள் முடிவில் 163/4 ரன்களுடன் வெற்றிக்கு போராடி வருகிறது. ஜூன் 7ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெற்றது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சுமாராக செயல்பட்டு வெறும் 296 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் கைகொடுக்க தவறிய நிலையில் ரகானே 89, ரவீந்திர ஜடேஜா 48, தாகூர் 51 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்து ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றினர். அதனால் 173 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கி அந்த அணி 270/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து இந்தியா வெற்றி பெற 444 என்ற வரலாற்றில் எட்டப்படாத மாபெரும் இலக்கை நிர்ணயித்தது.

- Advertisement -

சர்ச்சை கேட்ச்:
அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 66* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 47 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போது சுப்மன் கில் கொடுத்த கேட்ச்சை ஸ்லீப் பகுதியில் நின்று கேமரூன் கிரீன் பிடித்தார். இருப்பினும் தரையோடு தரையாகப் பிடித்ததால் சந்தேகப்பட்ட நடுவர்கள் 3வது நடுவரின் உதவியை நாடினர். அதை பெரிய திரையில் சோதித்த போது பந்தை காற்றில் பிடித்த அவர் கேட்ச்சை முழுமை செய்யும் போது தரையில் உரசியது நன்றாக தெரிந்தது.

இருப்பினும் அதை சற்று பெரிதாக்கி பார்த்த 3வது நடுவர் பந்துகளுக்கு கீழே விரல்கள் இருந்த காரணத்தால் கண்ணை மூடிக்கொண்டு அவுட் கொடுத்தது களத்தில் இருந்த ரோகித் சர்மாவை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஏனெனில் அவருடைய விரல்களுக்கு நடுவே பந்து தரையில் உரசியது தெளிவாக தெரிந்தது. இருப்பினும் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு கொடுக்காமல் சுமாரான தீர்ப்பை வழங்கிய நடுவரை வீரேந்திர சேவாக், வாசிம் ஜாபர் போன்ற முன்னாள் வீரர்களும் இந்திய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சித்தனர்.

- Advertisement -

அத்துடன் களத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் சீட்டர் சீட்டர் என்றும் முழங்கி ஆஸ்திரேலிய அணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல வர்ணனையாளராக செயல்பட்ட முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “ஒருவேளை சுப்மன் கில் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் இருந்தால் நடுவர் அவுட் கொடுத்திருக்க மாட்டார்” என்று சிரித்துக்கொண்டே கலாய்த்து விமர்சித்தார்.

இருப்பினும் அதை மறுத்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் “இந்தியாவில் இருக்கும் அனைவரும் அதை அவுட் இல்லையென்று நினைக்கிறார்கள். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அனைவரும் அதை அவுட் என்று நினைக்கிறார்கள்” என்று வர்ணனை செய்து பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

அத்துடன் தரையில் பந்தின் சில பகுதிகள் பட்டாலும் அதை பிடிக்கும் போது ஃபீல்டரின் கட்டுப்பாடு முழுமையாக பந்தின் மீது இருந்ததால் அது அவுட் என்று தெரிவித்த அவர் அதைத்தான் நடுவர்களும் அறிவித்ததாக கூறினார். அதைப் பார்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் 2008 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் நீங்கள் சொன்னதுக்காக அவுட் கொடுத்த நடுவர்கள் இப்போது மட்டும் உங்கள் பேச்சைக் கேட்காமல் இருப்பார்களா என்று வெளிப்படையாக கலாய்த்தது.

இதையும் படிங்க:WTC Final : எனக்கு எந்த டவுட்டும் இல்ல. எல்லாம் அவரோட டெசிஷன் தான். சர்ச்சை கேட்ச் குறித்து – கேமரூன் கிரீன் விளக்கம்

அப்படி சர்ச்சை தீர்ப்பால் 18 ரன்களில் அவுட்டாக கில்லை தொடர்ந்து மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட ரோஹித் சர்மா தேவையின்றி சுமாரான ஷாட் அடித்து நேதன் லயன் சுழலில் 43 ரன்களுடன் பெவிலியன் திருப்பினார். அடுத்த ஓவரிலேயே புஜாரா அதை விட மோசமான ஷாட் அடித்து 27 ரன்களில் பெவிலியன் திரும்பிய நிலையில் இன்றைய கடைசி நாளில் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் உள்ள இந்தியாவுக்கு களத்தில் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி 44* ரன்கள் ரகானே 20* ரன்கள் எடுத்து போராடி வருவதால் வெற்றி பெற வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement