WTC Final : எனக்கு எந்த டவுட்டும் இல்ல. எல்லாம் அவரோட டெசிஷன் தான். சர்ச்சை கேட்ச் குறித்து – கேமரூன் கிரீன் விளக்கம்

Cameron-Green-1
- Advertisement -

லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற இருக்கும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 280 ரன்கள் அடித்தால் இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம். இல்லையெனில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை ஆல் அவுட்டாக்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம்.

Rohit

- Advertisement -

இப்படி இரு அணிகளுக்குமே வெற்றிக்கான வாய்ப்பு சமமாக இருப்பதால் இந்த போட்டியின் மீதான சுவாரசியம் அதிகரித்துள்ளது. நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணியானது டிக்ளேர் செய்யவே இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மிகப்பெரிய இலக்கினை துரத்துவதற்காக இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் துவக்கத்தில் இருந்தே அதிரடி காண்பித்தனர். அப்படி அவர்களது அதிரடியினால் மிகச் சிறப்பாக ரன்களை சேர்த்து கொண்டே வந்த வேலையில் 18 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் முதல் விக்கெட்டாக ஸ்காட் போலந்து பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Cameron Green

அவர் ஆட்டமிழந்த விதம்தான் நேற்றிலிருந்து அதிக அளவில் பேசப்படும் விடயமாக மாறி உள்ளது. ஏனெனில் அந்த பந்தை கேட்ச் பிடித்த கேமரூன் கிரீன் பந்தை தரையில் உரசியது போன்று தெரிந்தது. எனவே அந்த விக்கெட்டை உறுதி செய்ய மூன்றாவது நடுவரின் உதவியையும் களத்தில் இருந்த அம்பயர்கள் நாடினர்.

- Advertisement -

ஆனால் மூன்றாவது அம்பயரும் பலமுறை அந்த கேட்சை மீண்டும் மீண்டும் ரீப்ளே செய்து பார்த்துவிட்டு இறுதியில் சுப்மன் கில் அவுட் என்று அறிவித்தார். ஆனால் இந்த கேட்ச் சரியாகப் பிடிக்கப்படவில்லை என்றும் பந்து தரையில் பட்டதாக பல்வேறு புகைப்படங்ககளை ரசிகர்கள் பகிர்ந்து தங்களது அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து இந்த கேட்ச் குறித்து பேசிய கேமரூன் கிரீன் கூறுகையில் :

இதையும் படிங்க : WTC Final : சச்சினின் ஆல் டைம் ஐசிசி நாக் அவுட் சாதனையை தகர்த்த கிங் கோலி புதிய சாதனை – இந்தியாவுக்கு சரித்திரம் படைப்பாரா?

சுப்மன் கில் கொடுத்த கேட்சை பிடித்த தருணத்தில் அந்த கேட்சை நான் சரியாகத் தான் பிடித்தேன் என்று நினைக்கிறன். அதில் எந்தவித சந்தேகமும் எனக்கு ஏற்படவில்லை. அதன் பின்னர் இந்த கேட்ச் முடிவை மூன்றாவது நடுவரிடம் விட்டு விட்டோம். அவரே இந்த கேட்சை சரி என்று ஒப்புக்கொண்டு அவுட் கொடுத்து விட்டார் என கேமரூன் கிரீன் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement