1984 – 2023 வரை நடைபெற்றுள்ள ஆசியக்கோப்பை தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி – எது தெரியுமா?

Shanaka-and-Rohit
- Advertisement -

ஆசிய கண்டத்தின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடும் மிக முக்கிய தொடர்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஆசிய கோப்பை தொடரானது கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்ற இந்த தொடரானது தற்போது சீரான இடைவெளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 15 முறை நடைபெற்று முடிந்துள்ள ஆசிய கோப்பை தொடரானது இந்த ஆண்டு 2023-ல் 16-வது முறையாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளது.

எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வேளையில் இந்த தொடருக்கான போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் என ஆறு அணிகள் மோத இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் கடைசியாக நடைபெற்ற 2022-ஆம் ஆண்டு வரை 15 ஆசிய கோப்பை தொடர்களில் அதிக முறை கோப்பையை வென்ற அணி எது? அதிக முறை இறுதிப்போட்டிக்கு சென்று தோல்வி அடைந்த அணி எது? என்பது குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 15 தொடர்களில் இந்திய அணி அதிகபட்சமாக 7 முறை ஆசிய கோப்பை தொடரையை வென்றுள்ளது. அதேபோன்று மூன்று முறை இறுதிப்போட்டிக்கு சென்று தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்ததாக இலங்கை அணி 6 முறை இந்த தொடரை வென்றுள்ளது.

- Advertisement -

அதேபோன்று 6 முறை இறுதிப் போட்டிக்கு சென்று தோல்வியை சந்தித்துள்ளது. அவர்களுக்கு அடுத்து பாகிஸ்தான அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது. மூன்று முறை இறுதி போட்டிக்கு சென்று தோல்வியை சந்தித்துள்ளது. இவர்களை தவிர்த்து பங்களாதேஷ் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு சென்றிருந்தாலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 17 வீரர்கள் லிஸ்ட் இதோ – மிஸ் பண்ணியிருந்தா பாத்துக்கோங்க

கடைசியாக 2022-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெற்ற இந்த ஆசிய கோப்பை தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடினர். அந்தத் தொடரில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி வெற்றி பெற்று நடப்பு சாம்பியனாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement