இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற இருக்கும் 2023-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த ஆசிய கோப்பை தொடர்பானது எதிர்வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ள வேளையில் இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிசிசிஐ சார்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த 17 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
அந்த வகையில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படவுள்ள இந்த தொடரில் அவரது தலைமையில் 17 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்த அணியே பெரும்பாலும் எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியாகவும் இருக்கும் என்பதனால் இந்த அணி தேர்வின் மீது பல்வேறு விவாதங்கள் இன்று வரை இருந்து வருகின்றன.
ஆனாலும் இதுதான் உறுதி செய்யப்பட்ட அணி என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடர்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 17 வீரர்களின் பட்டியல் இதோ :
இதையும் படிங்க : யார் இந்த அனிக்கிட் சவுத்ரி? ரோஹித் மற்றும் கோலிக்கு எதிராக பந்துவீசும் புயல் – பி.சி.சி.ஐ அசத்தல் பிளான்
1) ரோஹித் சர்மா (கேப்டன்), 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) சூரியகுமார் யாதவ், 6) திலக் வர்மா, 7) கே.எல் ராகுல், 8) இஷான் கிஷன், 9) ஹார்டிக் பாண்டியா (து.கேப்டன்), 10) ரவீந்திர ஜடேஜா, 11) ஷர்துல் தாகூர், 12) அக்சர் படேல், 13) குல்தீப் யாதவ், 14) ஐஸ்ப்ரீத் பும்ரா, 15) முகமது ஷமி, 16) முகமது சிராஜ், 17) பிரசித் கிருஷ்ணா (சஞ்சு சாம்சன் – பேக்கப் வீரர்)



