அடுத்த ஹார்டிக் பாண்டியா ரெடி. பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் அசத்தும் ஜம்மு காஷ்மீர் வீரர் – யார் இவர்?

Aquib-Nabi-1
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாலில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பிறகு பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது யாதெனில் : அணியில் தரமான ஆல்ரவுண்டர்கள் மற்றும் பந்துவீசும் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் இல்லாததே காரணம் என்று தெளிவாக தெரிந்தது. டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை பந்துவீச தெரிந்த பேட்ஸ்மேன்கள் நிச்சயம் அணிக்கு தேவை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால் ஏகப்பட்ட ஆல்ரவுண்டர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் இந்திய அணியை பொறுத்தவரை ஹார்டிக் பாண்டியா மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோரை தான் இந்திய அணி அதிகம் நம்பி இருக்கிறது. அவர்களை தவிர்த்து தரமான ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் இல்லை. ஒரு சில ஆல்ரவுண்டர்கள் இந்திய அணிக்கு வந்தாலும் வெகுவிரைவாகவே அவர்கள் அணியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே விஜய் சங்கர், க்ருனால் பாண்டியா, ஷிவம் துபே, வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை இந்திய அணி பயன்படுத்தி வெளியேற்றி விட்டது. அடுத்ததாக தற்போது இந்திய அணிக்கு அக்சர் பட்டேல் ஓரளவு கை கொடுத்து வருகிறார். அதேபோன்று பாண்டியாவும் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்கிறார். இந்நிலையில் இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வேண்டும் என்று பார்க்கையில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான ஆக்யூப் நபி என்பவர் தனது அசத்தலான வேகப்பந்து வீச்சு மற்றும் அதிரடியான பேட்டிங் என அசத்தி வருகிறார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் பிரமாதப்படுத்தி வரும் அவர் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடரில் அவரை ஏதாவது அணி ஏலத்தில் எடுத்தால் நிச்சயம் அவர் தனது திறனை நிரூபிப்பார் என்று சமூக வலைதளத்தில் அவர் குறித்த ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வேகப்பந்து வீச்சில் ஸ்விங் செய்து அசத்தலாக விக்கெடுகளை வீழ்த்தி அருமையான பந்துவீச்சினை வெளிப்படுத்துகிறார்.

- Advertisement -

அதோடு பின்னர் அவர் பேட்டிங்கில் சிக்ஸர்களாக அடித்து தனது பேட்டிங் திறனையும் வெளிப்படுத்தி உள்ளார். 26 வயதான அவர் ஜம்மு காஸ்மீர் அணிக்காக டொமஸ்டிக் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : அவங்க யாருக்குமே ரெஸ்ட் கொடுக்காதீங்க. கண்டிப்பா விளையாட வையுங்க – சுனில் கவாஸ்கர் காட்டம்

அந்தவகையில் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 28 விக்கெட்டுகளையும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 20 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளையும், அதோடு 17 டி20 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். அதோடு பேட்டிங்கிலும் 545 ரன்களையும் குவித்துள்ளார். நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் அவர் எதாவது அணிக்கு ஏலம் போனால் அடுத்த கட்டத்திற்கு செல்வார் என்பது கிரிக்கெட் நிபுணர்களின் கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement