அவங்க யாருக்குமே ரெஸ்ட் கொடுக்காதீங்க. கண்டிப்பா விளையாட வையுங்க – சுனில் கவாஸ்கர் காட்டம்

Gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதனை தொடர்ந்து தற்போது அடுத்ததாக நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

IND-vs-NZ

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இளம் வீரர்களுடன் விளையாடி வருகிறது.

ஆனால் மறுபுறம் டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியானது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அனைத்து வீரர்களும் கொண்ட அணியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

IND vs ZIM Hardik Pandya Bhuvneswar Kumar Rohit Sharma

இப்படி சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியே அனைத்து வீரர்களையும் அணியில் வைத்து விளையாடும்போது அரையிறுதி சுற்றோடு வெளியேறிய இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது. ஒருபுறம் இளம் வீரர்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைத்தாலும் மறுபுறம் சீனியர் வீரர்கள் அடிக்கடி ஓய்வு கொடுப்பது ஏன் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சீனியர் வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வு வழங்கக்கூடாது என்றும் அவர்களை தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும் என்றும் தனது காட்டமான கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை இந்திய அணியின் எந்த பேட்ஸ்மனுக்கும் ஓய்வு வழங்கக்கூடாது.

இதையும் படிங்க : என்னை கலாய்ச்சிங்களே இப்போ என்ன சொல்றிங்க? தனது அணியை சாதனை வெற்றி பெற வைத்து மிரட்டும் ரியன் பராக்

ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒரு வருடம் காலத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. எனவே வீரர்கள் அனைவரும் தொடர்ச்சியாக விளையாடினால் தான் அவர்களுக்கு இடையே நல்ல புரிதல் உண்டாகும். எனவே யாருக்கும் ஓய்வு தேவையில்லை என்பதே எனது கருத்து என காட்டமான கருத்தை முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement