என்னை கலாய்ச்சிங்களே இப்போ என்ன சொல்றிங்க? தனது அணியை சாதனை வெற்றி பெற வைத்து மிரட்டும் ரியன் பராக்

- Advertisement -

இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளப்படுத்தும் உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 2022 சீசன் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அதில் நவம்பர் 28ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற காலிறுதி சுற்றின் முதல் காலிறுதி போட்டியில் முதல்மு றையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீரை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த அசாம் அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் நிர்ணிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 350 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக சுபம் கஜுரியா 8 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்து 120 (84) ரன்களும் ஹெனான் நசீர் 5 பவுண்டரி 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் சதமடித்து 124 (113) ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 351 என்ற மெகா இலக்கை துரத்திய அசாம் அணிக்கு கேப்டன் சைக்கியா 23, ஹசாரிக்கா 8 என ஆரம்பத்திலே தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அதனால் 45/2 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரியான் பராக் மற்றும் ரிசவ் தாஸ் ஆகியோர் நங்கூரத்தை போட்டு ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடினர்.

- Advertisement -

என்னையா கலாய்க்கிறிங்க:

ஒரு கட்டத்தில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் ரியன் பராக் சதமடித்தும் ஓயாமல் ஜம்மு காஷ்மீர் பவுலர்களை வெளுத்து வாங்கி 12 பவுண்டரி 12 சிக்சருடன் 174 (116) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். 7வது ஓவரில் அவருடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 277 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த ரிசவ் டாஸ் கடைசி வரை அவுட்டாகாமல் சதமடித்து 11 பவுண்டரி 1 சிக்ருடன் 114* (118) ரன்கள் குவித்தார். அதனால் 46.1 ஓவரிலேயே 354/3 ரன்களை எடுத்து அசால்டாக வென்ற அசாம் நாளை நடைபெறும் அரையிறுதியில் மகாராஷ்டிராவை எதிர்கொள்கிறது.

இந்த அற்புதமான வெற்றிக்கு 174 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ரியான் பராக் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார் என்று வெளிப்படையாக சொல்லலாம். ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் இதுபோன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக வாங்கப்பட்ட அவர் ஒரு போட்டியில் 50 ரன்கள் குவித்து இளம் வயதில் அரை சதமடித்த வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்து வெற்றி பெற வைத்தார். ஆனால் அதன் காரணமாக தக்கவைக்கப்பட்ட அவர் கடந்த 4 சீசன்களில் வெறும் 2 அரை சதங்களை மட்டுமே எடுத்து படுமோசமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இருப்பினும் அவரின் திறமையை உணர்ந்து பெரிய தொகைக்கு தக்க வைத்து ராஜஸ்தான் நிர்வாகம் கொடுக்கும் வாய்ப்புகளை அவர் வீணடிக்கும் வகையில் விளையாட்டுத்தனமாக செயல்பட்டு வருகிறார். அதை விட 2022 ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டிகளின் முடிவில் பெரிய சாதனைகள் செய்த விராட் கோலியை போல் ட்விட்டரில் பேசுவதும், களத்தில் நடுவர்களை கலாய்ப்பதும், அறிவுரை வழங்கிய ஆஸ்திரேலியாவின் மேத்தியூ ஹெய்டன் போன்ற ஜாம்பவான்களை கலாய்ப்பது போன்ற வேலைகளில் அவர் ஈடுபட்டது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

அதனால் வாயில் பேசாமல் செயலில் செய்து காட்டுங்கள் என்று அவரைத் தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அடுத்த தோனியாக வரப்போகிறேன் என்று சமீபத்தில் அவர் பேசியதையும் ரசிகர்கள் கலாய்த்தனர். அந்த நிலையில் இந்த விஜய் ஹசாரே கோப்பையில் 117, 14, 32, 128, 17, 55*, 0, 174 என 537 ரன்களை 76.71 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ள ரியான் பராக் என்னையா கலாய்க்கிறிங்க என்ற வகையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக அவரது சதத்தால் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் நாக் அவுட் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற சாதனையை அசாம் படைத்துள்ளது. அதனால் இப்படி வாயில் பேசாமல் பேட்டில் பேசுமாறு தான் ரசிகர்களும் ஆரம்பம் முதலே மறைமுக உந்துதலை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கையிலேயே தங்கத்தை வெச்சுகிட்டு ஏன் அலையுறீங்க – ருதுராஜ்க்கு சிஎஸ்கே ரசிகர்கள் மெகா ஆதரவு, சென்னை நிர்வாகம் ஏற்குமா

அந்த சாதனை பட்டியல்:
1. 354/3 – அசாம், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக, 2022.
2. 320/6 – பெங்கால், மகாராஷ்டிராவுக்கு எதிராக, 2017

Advertisement