இந்திய டி20 அணியில் நேரடியாக தேர்வுசெய்யப்ட்ட பெங்கால் வீரர். யார் இவர்? – அப்படி என்ன செய்தார்?

Mukesh-Kumar
- Advertisement -

இந்திய அணியானது வங்கதேச தொடரை முடித்து தற்போது நாடு திரும்பியுள்ள வேளையில் அடுத்ததாக இலங்கை அணிக்கெதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த இரு தொடர்களுக்கான அட்டவணையும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் இந்த இலங்கை அணிக்கெதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை நேற்று முன்தினம் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டது. அதனபடி இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோஹித், கோலி, ராகுல், ஜடேஜா, பும்ரா, ஷமி போன்றோர் இடம்பெறவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக இளம்வீரர்களை கொண்ட இந்திய அணியே டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 அணிக்கு ஹார்டிக் பாண்டியா கேப்டனாகவும், சூரியகுமார் யாதவ் துணைக்கேப்டனாகவும் செயல்பட இருக்கின்றனர். இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முகேஷ் குமார் என்கிற வீரரின் இணைப்பே அனைவரது மத்தியிலும் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.

ஏனெனில் இதுவரை ஒரேயொரு ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடாமல் இவர் எப்படி இந்திய அணியில் இடம்பிடித்தார் என்ற கேள்வியும் பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் அதற்கான விளக்கத்தை இங்கு நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி 29 வயதான பெங்கால் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முதல்தர போட்டிகளில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

மேலும் பெங்கால் அணிக்காக 33 முதல்தர போட்டிகளிலும், 24 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதோடு அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூர் தொடர்களில் எல்லாம் அவர் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணியிலும் கடந்த சில தொடர்களாகவே அவர் நெட் பவுலராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 சீசனில் தடுமாற வாய்ப்புள்ள பெரிய கோடிகளுக்கு வாங்கப்பட்ட டாப் 4 வீரர்களின் பட்டியல்

அவரது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு காரணமாகவே அவர் டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்காக நெட் பவுலாராக இருந்த அவரை டெல்லி அணி இம்முறை 5.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement