ஐபிஎல் 2023 சீசனில் தடுமாற வாய்ப்புள்ள பெரிய கோடிகளுக்கு வாங்கப்பட்ட டாப் 4 வீரர்களின் பட்டியல்

Camron-Green
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் கோலாகலமாக நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்று முடிந்தது. பொதுவாகவே ஐபிஎல் தொடர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகரான அழுத்தமும் மதிப்பும் வாய்ந்த தொடராகும். ஒரே வித்தியாசம் என்னவெனில் சர்வதேச கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டால் நம் தாய்நாடு தோற்று விடுமே என்று கவலைப்படக்கூடிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் சொதப்பலாக செயல்பட்டால் நம்முடைய சம்பளம் குறைந்து விடுமே என்று கவலைப்படுவார்கள்.

அத்துடன் ஐபிஎல் ஏலத்தில் பிரம்மாண்ட தொகைக்கு வாங்கப்படும் வீரர்கள் எந்தளவுக்கு சந்தோசப்படுகிறார்களோ அந்தளவுக்கு மனதிற்குள் பயத்தையும் எதிர்கொள்வார்கள். ஏனெனில் பெரிய தொகைக்கு வாங்கப்படும் போது கிட்டத்தட்ட அனைத்து ரசிகர்களின் மொத்த கவனமும் அந்த வீரர்கள் மீது குவிந்து விடும். அதனால் எப்படியாவது வாங்கிய மிகப்பெரிய சம்பளத்துக்கு சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்ற தேவையற்ற அழுத்தத்திற்கு உள்ளாகும் அந்த வீரர்கள் கடைசியில் ஒரு சூப்பர் ஸ்டார் திரைப்படம் பிளாப் ஆவதை போல் அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கி சுமாராக செயல்படுவார்கள்.

- Advertisement -

தடுமாற வாய்ப்பு:
சொல்லப்போனால் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 15 சீசன்களில் சராசரியாக 13 சீசன்களில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதே கிடையாது. அந்த வகையில் இந்த ஏலத்தில் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட சில கிரிக்கெட் வீரர்கள் 2023 சீசனில் தடுமாறுவதற்கு வாய்ப்புள்ளது என்று சொல்வதற்கான காரணங்களை பற்றி பார்ப்போம்:

4. கேமரூன் க்ரீன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவர் வெறும் 8 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவத்தை பெற்றிருந்தும் கைரன் பொல்லார்ட்டுக்கு மாற்றாக செயல்படும் திறமை பெற்றிருப்பதால் 17.50 என்ற பெரிய தொகைக்கு மும்பை வாங்கியுள்ளது. ஆனால் வெறும் 2 அரை சதங்களையும் 16.33 என்ற சுமாரான பேட்டிங் சராசரி கொண்டுள்ள அவர் பந்து வீச்சிலும் 9.04 என்ற எக்கனாமியில் மட்டுமே எடுத்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் ஆஸ்திரேலியா மற்றும் உள்ளூர் தொடர்களில் பெரும்பாலும் டாப் ஆர்டர் விளையாடும் அவர் மும்பை அணியில் மிடில் அணியில் விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதனாலேயே புதிய இடத்தில் தடுமாற வாய்ப்புள்ள அவர் இதற்கு முன் இந்திய ஆடுகளங்களில் பெரிய அளவில் விளையாடிய அனுபவமில்லாதவர். மேலும் அழுத்தமான ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விளையாட போகும் அவர் அவை அனைத்தையும் கடந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே மும்பை ரசிகர்களின் விருப்பமாகும்.

2. பென் ஸ்டோக்ஸ்: 16.25 கோடிக்கு சென்னை அணியில் வாங்கப்பட்டுள்ள உலகின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டரான இவருக்கு இவருக்கு கோடிகள், அழுத்தம் இதெல்லாம் பெரிய பிரச்சினை கிடையாது. இருப்பினும் ஆரம்ப காலத்தில் மற்றொரு இங்கிலாந்தின் தரமான ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாப் இதே போல் சென்னை அணிக்கு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட போது சுமாராகவே செயல்பட்டார்.

- Advertisement -

அத்துடன் டி20 கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் இவர் சென்னை அணியில் மிடில் ஆர்டரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவருடைய டெத் பவுலிங் சுமாராகவே இருப்பதால் ப்ராவோ அளவுக்கு செயல்படுவாரா என்பது கேள்விக்குறியாகிறது. இருப்பினும் தோனியின் தலைமையில் இவர் அசத்த வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் விருப்பமாகும்.

2. சாம் கரண்: 2022 டி20 உலக கோப்பையில் பைனலில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற இவரை 18.50 கோடி என்ற வரலாற்றின் உச்சகட்ட தொகைக்கு பஞ்சாப் வாங்கியது. இருப்பினும் 2021இல் மிரட்டிய இசான் கிசான் இவரைப் போலவே 2022 சீசனில் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டதால் ஏற்பட்ட தேவையற்ற அழுத்தத்தில் மொத்தமாக சொதப்பினார்.

- Advertisement -

எனவே அதே நிலைமையை சந்தித்துள்ள இவர் மீது நிச்சயமாக 2023 சீசனில் உலக அளவில் கவனம் இருக்கும் என்பதால் அதை கடந்து சிறப்பாக செயல்பட்ட வேண்டிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் தடுமாற வாய்ப்புள்ள இவர் 18.50 கோடியை பற்றி நினைக்காமல் வழக்கம் போல செயல்பட்டால் நிச்சயம் பஞ்சாப் அணிக்காக அசத்த முடியும்.

1. நிக்கோலஸ் பூரன்: கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்ட இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றுடன் வெளியேறும் அளவுக்கு கேப்டனாக மோசமாக செயல்பட்டார்.

இதையும் படிங்க: 278 ஸ்ட்ரைக் ரேட், 4 விக்கெட் – ரஞ்சி கோப்பையில் தெறிக்க விட்ட ரியான் பராக், கலாய்த்த ரசிகர்கள் பாராட்டு

ஆனாலும் 16 கோடி என்ற பெரிய தொகைக்கு எதனால் லக்னோ வாங்கியது என்று ரசிகர்கள் கிண்டலடிக்கும் நிலையில் இதுவரை பழைய பார்முக்கு திரும்பாத இவர் நிச்சயமாக 2023 சீசனிலும் தடுமாறுவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது.

Advertisement