இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் மாதம் 19-ஆம் தேதி வரை பிரம்மாண்டமான முறையில் கோலாலமாக நடைபெற இருக்கிறது. மொத்தம் பத்து நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 4-0க்கும் மேற்பட்ட போட்டிகள் உலக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. எனவே இந்த தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற பலம் வாய்ந்த அணிகள் பங்கேற்க இருப்பதினால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினையும் பெற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அக்டோபர் 5-ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் மோதவுள்ளன.
அதே போன்று இந்த தொடரில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு இந்தியாவின் தலைசிறந்த நட்சத்திரங்களுக்கு உலகக்கோப்பை போட்டிகளை நேரில் காண இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ கோல்டன் டிக்கெட்டை வழங்கி உள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே பிசிசிஐ-யின் தலைமைச் செயலாளர் ஜெய் ஷா அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கும், இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கும் கோல்டன் டிக்கெட்டை வழங்கி அந்த தகவலை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்த கோல்டன் டிக்கெட்டை பெறுவதன் மூலம் நட்சத்திரங்களுக்கு என்னென்ன சலுகை கிடைக்கும் என்பது குறித்த தகவலையும் இங்கு காணலாம். அந்த வகையில் கோல்டன் டிக்கெட்டை பெறும் நட்சத்திரங்கள் உலககோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும், இந்தியாவின் எந்த மைதானத்திலும் நேரில் சென்று விஐபி ஸ்டாண்டில் அமர்ந்து கண்டு களிக்கலாம்.
இதையும் படிங்க : விராட் கோலி – டிராவிட்டின் 12 வருட சாதனையை தகர்த்த கான்வே – மிட்சேல் ஜோடி, இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து எளிதான வெற்றி
இந்தியாவில் உள்ள முக்கிய நட்சத்திரங்களான இவர்கள் மூலமாக இந்த தொடரை பெரிய அளவிற்கு கொண்டுசெல்லவே அவர்களுக்கான இந்த கோல்டன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் அனைத்து போட்டிகளையும் நேரில் விஐபி ஸ்டாண்டில் சகல வசதிகளுடன் கண்டுகளிக்க முடியும். இந்த டிக்கெட்டுகள் சச்சின் மற்றும் அமிதாப்க்கு மட்டுமின்றி இன்னும் பல்வேறு துறைகளை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.