ரோஹித் சர்மாவிற்கு பதிலாக செலக்ட்டாகியுள்ள அபிமன்யு ஈஸ்வரன் யார்? – அவர் தேர்வாக என்ன காரணம்?

Abhimanyu-Easwaran
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா கட்டை விரல் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக துவக்க வீரராக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் இடம் பெற்றுள்ளதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Rohith

- Advertisement -

அதன் பிறகு அபிமன்யு ஈஸ்வரன் யார்? என்பது குறித்த தேடல் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அந்த வகையில் முதல் தர கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் அபிமன்யு ஈஸ்வரன் குறித்து சில தகவல்கள் தற்போது சமூகவலைதளத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கும் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அபிமன்யு ஈஸ்வரன் ரோகித் சர்மாவிற்கு பதிலாக விளையாட உள்ளார்.

அதன்படி டேராடூன் நகரில் பிறந்த அபிமன்யு ஈஸ்வரன் தனது பத்து வயதிலேயே கொல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்து கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பிறகு பெங்கால் அணிக்காக அறிமுகமாகிய இவர் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பினை எதிர்பார்த்து தேர்வாளர்களின் கவனத்தை வெகு அளவில் ஈர்த்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்த அவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கூட இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

abhimanyu easwaran 1

ஆனாலும் இதுவரை அவருக்கு இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக உள்ளூர் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்திய அணிக்காக அறிமுகமாவதில் உன்னிப்பாக இருக்கிறார். இந்திய அணி தற்போது பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன்னர் வரை தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்திய ஏ அணிக்காக தலைமை தாங்கி பங்களாதேஷ் ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் 2 போட்டிகளில் 299 ரகளை குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் விளையாடிய அவர் 141 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் பெங்கால் அணிக்காக இதுவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது 27 வயதாகும் அவர் லெக் ஸ்பின்னர் என்பது மட்டுமின்றி துவக்க வீரராக களம் இறங்கி 2018 மற்றும் 19ஆம் ஆண்டு ரஞ்சித் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக ஆறு போட்டியில் 861 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க : 62 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நேர்ந்த பரிதாபம், மீண்டும் நொறுங்கிய பாகிஸ்தானின் உ.கோ கனவு – காலாய்க்கும் ரசிகர்கள்

இப்படி தனது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வந்த அபிமன்யு ஈஸ்வரன் இந்திய ஏ அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்றது மட்டுமின்றி அடுத்தடுத்து வந்த தியோதர் டிராபி மற்றும் விஜய் ஹாசாரே டிராபி என தொடர்ச்சியாக தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இந்திய ஏ அணியின் கேப்டனாக மட்டுமின்றி தற்போது இந்திய அணிக்கு தேர்வாகும் வகையில் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement