
கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்று முடிந்த லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து 151 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தானை விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக எந்த ஒரு கட்டத்திலும் இந்திய அணியால் அதிரடியாக ரன் குவிக்க முடியாமல் போனது. குறிப்பாக முதல் ஓவரிலேயே ரோஹித் விக்கெட்டை பறிகொடுத்த இந்திய அணி அதன்பிறகு மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் ராகுலின் விக்கெட்டையும் இழந்தது.
ஆனால் போட்டிக்கு அடுத்த நாள் ராகுல் ஆட்டமிழந்தது நோபால் என்றும் ஷாகின் அப்ரிடி நோ பால் வீசியதை அம்பயர் கவனிக்கவில்லை என்பது போன்றும் கருத்துக்கள் வெளியாகி அது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் அந்த விவகாரம் குறித்த உண்மை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி மூன்றாவது ஓவரின் முதல் பந்தை டெலிவரி செய்த பிறகு தான் ஷாஹீன் அப்ரிடியின் கால் வெளியே வந்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் எப்பொழுதும் வேகமாக ஓடிவந்து பவுலிங் செய்யும்போது பந்தினை டெலிவரி செய்துவிட்டு இவ்வாறு கிரீஸை விட்டு வெளியேறுவது வழக்கம் தான். அதன்படி ஷாஹீன் அப்ரிடி பந்தினை ரிலீஸ் செய்த பிறகு தான் லைனை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அதனை வீடியோவில் Pause செய்து புகைப்படமாக எடுத்து நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி உள்ளனர். இந்த விடயத்தில் உண்மை யாதெனில் பந்து டெலிவரி ஆகும் போது சரியான இடத்தில் தான் கால் இருந்ததாகவும், அது கரெக்ட்டான பால் தான் என்பதும் நோ பால் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க : இந்திய அணியை வீழ்த்தியதும் கத்தி கத்தி தொண்டை வலியே வந்திருச்சு – சுவாரசிய தகவலை பகிர்ந்த பாக் வீரர்
மேலும் பந்துவீசிய பின்னர் காலை வெளியே வைத்ததை யாரோ ஒருவர் பாஸ் செய்து புகைப்படம் எடுத்து நோ பால் என்று கூறி அதை இணையத்தில் பதிவிட, அதை சரிபார்க்காமல் பலரும் அதை தொடர்ச்சியாக பகிர்ந்து, அணியின் தோல்விக்கு இதுவே முக்கிய காரணம் என்று கூற, அதுவே கடந்த சில நாட்களாக விவாத பொருளாக மாறி இருந்தது. இந்த நிலையில் தான் அதன் உண்மை நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது.