இந்திய அணியை வீழ்த்தியதும் கத்தி கத்தி தொண்டை வலியே வந்திருச்சு – சுவாரசிய தகவலை பகிர்ந்த பாக் வீரர்

Hafeez
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்ற போதே ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்தது. மேலும் இந்திய அணியின் முதல் லீக் போட்டியே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி அமைந்ததால் இது நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களின் கவனத்தை இந்த போட்டி வெகுவாக ஈர்த்தது.

Shaheen-afridi-1

- Advertisement -

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இதுவரை உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியே அடையாமல் இருந்த இந்திய அணி முதல் முறையாக தோல்வியடைந்து ஏமாற்றத்தை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் 151 ரன்கள் அடித்து இருந்தாலும் இரண்டாவது பேட்டிங்கின் போது பாகிஸ்தான் அணி விக்கெட் இழக்காமல் 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் இந்த சிறப்பான வெற்றிக்கு பாராட்டுகள் பல்வேறு தரப்பிலும் இருந்து குவிந்தன. மேலும் மைதானத்திலேயே பாகிஸ்தான் வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீண்டகால காத்திருப்புக்கு பிறகு முதல் முறையாக உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை மைதானத்திலேயே கொண்டாடினர்.

Hafeez

இந்நிலையில் இந்திய அணியை வீழ்த்திய பிறகு அந்த வெற்றி கொண்டாட்டத்தில் தான் மகிழ்ச்சியாக கத்தி கத்தி தொண்டை வலியை ஏற்பட்டுவிட்டது என பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் ஒருவர் தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரரான முகமது ஹபீஸ் கூறுகையில் : இந்திய அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு மற்ற வீரர்களை காட்டிலும் நான் மிகவும் சத்தமாக கத்தினேன். இதன்காரணமாக எனக்கு இன்னும் தொண்டை வலி இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 2 போட்டியிலேயே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த பாகிஸ்தான் அணி – எப்படி தெரியுமா ?

எங்கள் அனைவருக்குமே இந்திய அணிக்கு எதிரான வெற்றி ஒரு உணர்ச்சிகரமான ஒன்று என்று அவர் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இரண்டு வெற்றிகளுடன் அவர்கள் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement