2 போட்டியிலேயே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த பாகிஸ்தான் அணி – எப்படி தெரியுமா ?

shaheen-afridi

ஐசிசி நடத்தும் ஏழாவது உலக கோப்பை தொடரானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் தேதி துவங்கிய இந்த தொடரானது தற்போது சூப்பர் 12-ஆட்டங்களை எட்டியுள்ளது. தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது 12 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து விளையாடி வருகின்றன. இதில் ஒவ்வொரு குழுவிலும் 6 அணிகள் மோதுகின்றன. இந்த சூப்பர் 12- சுற்று போட்டிகள் தற்போது சூடுபிடித்துள்ளன.

pak

அந்த இரண்டு குழுவில் இருந்து முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும். இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் குரூப் இரண்டில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணியானது இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையிலேயே கிட்டதட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ஏனெனில் இந்தியா மற்றும் நியூசிலாந்து போன்ற பலமான அணிகளை முதலிரண்டு ஆட்டங்களில் பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது. தற்போது அவர்களுக்கு மீதியுள்ள மூன்று போட்டிகளை ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளனர்.

rizwan

இதன் காரணமாக நிச்சயம் மீதமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெறவும் பாகிஸ்தான் அணிக்கு எளிதான வாய்ப்பு உள்ளதால் முதல் அணியாக பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளையில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்ததால் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேற கடுமையான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 2 போட்டியிலேயே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த பாகிஸ்தான் அணி – எப்படி தெரியுமா ?

எது எப்படி இருப்பினும் தற்போதே பாகிஸ்தான் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பு உறுதி செய்துள்ளது என்றே கூறலாம். அதுதவிர ஐக்கிய அரபு மைதானங்களில் அவர்களது ஆட்டம் சிறப்பாக உள்ளதால் கோப்பையை கைப்பற்றவும் அவர்களுக்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement