ஐபிஎல் 2022 மெகா ஏலம் : 2 கோடிகள், 1.5 கோடிகள், 1 கோடிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களின் – மொத்த லிஸ்ட் இதோ

Auction
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடைபெற உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்த சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டதன் காரணமாக இம்முறை அனைத்து அணிகளுக்குமான வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு முன்பாக இந்த தொடரில் ஏற்கனவே உள்ள சென்னை, மும்பை உள்ளிட்ட பழைய 8 அணிகளும் தோனி, ரோஹித் சர்மா உள்ளிட்ட தாங்கள் விரும்பிய 4 அதிகபட்ச வீரர்களை கடந்த டிசம்பர் மாதம் தேர்வு செய்தன. அதேபோல் லக்னோ மற்றும் அஹமதாபாத் ஆகிய அணிகள் கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா உட்பட அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்துள்ளன.

ahmedabad

மெகா ஏலத்தில் 1214 வீரர்கள்:
இதை அடுத்து நடைபெற உள்ள ஐபிஎல் 2022 தொடரின் மெகா ஏலத்தில் பங்கேற்க 1214 வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்த ஏலத்தில் பங்கேற்க அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து 896 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.வெளிநாடுகளிலிருந்து 318 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவிலிருந்து 59 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

அதிகபட்ச தொகை:
இந்நிலையில் இந்த மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் அதிகபட்ச அடிப்படை தொகையாக 2 கோடிகள், 1.5 கோடிகள், 1 கோடி மற்றும் அதற்கும் கீழ் என்ற வகைகளில் பிரிக்கப்பட்டு உள்ளார்கள்.

Ahmedabad

2 கோடிகள் :
அந்த வகையில் அடிப்படை தொகையாக 2 கோடியை கொண்ட பட்டியலில் 49 வீரர்கள் போட்டி போட உள்ளனர். இதில் 17 வீரர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 32 வீரர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களின் பெயர்கள் இதோ:

- Advertisement -

இந்திய வீரர்கள் : ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சஹால், தீபக் சாஹர், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், புவனேஸ்வர் குமார், தேவ்தத் படிக்கல், க்ருனால் பாண்டியா, ஹர்சல் படேல், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, முகமது சமி, ஷார்துல் தாக்கூர், ராபின் உத்தப்பா, உமேஷ் யாதவ்.

eng ipl

வெளிநாட்டு வீரர்கள் :
முஜீப் ஜாட்ரான், அஸ்டன் அகர், நேத்தன் குல்டர்-நைல், பட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா, ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான், சாம் பில்லிங்ஸ், ஷாகிப் மஹ்மூத், கிறிஸ் ஜோர்டான், கிரேக் ஓவர்டன், அடில் ரசித், ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, மார்க் வுட், டிரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன், குயின்டன் டி காக், மேர்சன்ட் டீ லங்கே, டூ பிளஸிஸ், காகிஸோ ரபாடா, இம்ரான் தாஹிர், பாபின் ஆலன், டுவைன் பிராவோ, எவின் லீவிஸ், ஓடென் ஸ்மித்.

- Advertisement -

அதிகபட்ச அடிப்படை தொகையாக 1.5 கோடிகளுக்கு போட்டியிட போகும் வீரர்கள் இதோ :
அமித்ஷா மிஸ்ரா, இஷாந்த் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஆரோன் பின்ச், கிறிஸ் லின், நாதன் லயன், கேன் ரிச்சர்ட்சன், ஜானி பைர்ஸ்டோ, அலெஸ் ஹேல்ஸ், இயான் மோர்கன், டேவிட் மாலன், ஆடம் மில்னே, காலின் முன்ரோ, ஜிம்மி நீசம், கிளென் பில்லிப்ஸ், டிம் சௌதீ, கோலின் இன்க்ராம், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரான்.

இதையும் படிங்க : IPL 2022 : அடேங்கப்பா 1214 வீரர்களுக்காக நடக்கும் ஐபிஎல் 2022 மெகா ஏலம் – மொத்த விவரம் இதோ

அதிகபட்ச அடிப்படைத் தொகையாக 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் போட்டியிடப் போகும் வீரர்கள் இதோ:
பியூஸ் சாவ்லா, கேதார் ஜாதவ், பிரசித் கிருஷ்ணா, தங்கராசு நடராஜன், மனிஷ் பாண்டே, அஜிங்க்ய ரகானே, நிதிஷ் ராணா, வ்ரித்திமான் சஹா, குல்தீப் யாதவ், ஜெயந் யாதவ், முஹம்மத் நபி, ஜேம்ஸ் பால்க்னெர், மொய்சஸ் ஹென்றிக்ஸ், மார்ன்ஸ் லபுஸ்ஷேன், ரிலே மெரிடித், ஜோஷ் பிலிப், டார்சி ஷார்ட், ஆண்ட்ரே டை, டான் லாரன்ஸ், லியம் லிவிங்ஸ்டன், டைமல் மில்ஸ், ஓலி போப், டேவோன் கோன்வே, கோலின் டீ க்ராந்ஹோம், மிட்செல் சாண்ட்னெர், ஐடெண் மார்க்ரம், ரிலே ரோசசௌவ், தப்பிரிஸ் ஷம்சி, ராசி வன் டேர் டுசென், வணிந்து ஹஸரங்கா, ரோஸ்டோன் சேஸ், ஷெர்பென் ரூதர்போர்ட.

Advertisement