IPL 2022 : அடேங்கப்பா 1214 வீரர்களுக்காக நடக்கும் ஐபிஎல் 2022 மெகா ஏலம் – மொத்த விவரம் இதோ

auction-1
- Advertisement -

ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரில் 2022 சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 10 அணிகளுடன் கூடிய 74 போட்டிகள் அடங்கிய ஐபிஎல் 2022 தொடர் பிரம்மாண்டமாக வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னர் பிப்ரவரி இரண்டாம் வாரம் இந்த வருடம் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுக்கும்.

IPL

- Advertisement -

ஐபிஎல் மெகா ஏலம் 2022 :
இதில் சென்னை, மும்பை உள்ளிட்ட இந்த தொடரில் ஏற்கனவே உள்ள பழைய 8 அணிகளும் தாங்கள் விரும்பிய 4 அதிகபட்ச வீரர்களை தக்க வைத்துக்கொண்டு அவர்களின் பெயர் மற்றும் சம்பளங்கள் பற்றிய விவரங்களை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தன. அத்துடன் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் தாங்கள் விரும்பும் 3 வீரர்களை அதிகபட்சமாக தேர்வு செய்து கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா உள்ளிட்ட 6 வீரர்களை இந்த 2 அணிகளும் தேர்வு செய்துள்ளன. மொத்தத்தில் 10 அணிகளும் தாங்கள் விரும்பும் முதல்கட்ட வீரர்களை தேர்வு செய்துவிட்டன.

Ipl

1214 வீரர்கள்:
இவர்கள் போக ஐபிஎல் தொடரில் பங்கேற்க உலகம் முழுவதிலும் உள்ள பல கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்தபின் இறுதிகட்ட வீரர்களின் பெயர் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 1214 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதையடுத்து இந்த 1214 வீரர்களுக்காக நடக்கும் ஐபிஎல் 2022 மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது.

ipl

முழு விவரம் :
இதில் 896 பேர் இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஆவர். வெளிநாடுகளிலிருந்து 318 வீரர்கள் உள்ளனர். இதில் 270 வீரர்கள் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். 903 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடதவர்களாக உள்ளனர். மேலும் உறுப்பு நாடுகள் எனப்படும் நேபாள், அமீரகம், ஓமன் போன்ற சிறிய நாடுகளில் இருந்து 41 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

வெளிநாட்டு வீரர்கள்:
ஐபிஎல் ஏலத்தில் 318 வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவிலிருந்து 59 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் இருந்து 48 பேர், வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் இருந்து 41 பேர், இலங்கையிலிருந்து 36 பேர், இங்கிலாந்தில் இருந்து 30 பேர், நியூசிலாந்து நாட்டில் இருந்து 29 பேர், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து 20 பேர், வங்கதேசத்தில் இருந்து 9 பேர், அயர்லாந்தில் இருந்து 3 பேர், ஜிம்பாப்வேயில் இருந்து 2 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க : தங்கள் அணியில் இருந்து வெளியேறி புது கேப்டனாகிய பாண்டியாவுக்கு வாழ்த்து சொன்ன – மும்பை இந்தியன்ஸ்

அத்துடன் நேபாள் நாட்டில் இருந்து 15 பேரும், அமெரிக்காவில் இருந்து 14 பேரும், நமிபியாவில் இருந்து 5 பேரும், ஓமன் நாட்டில் இருந்து 4 பேரும், நெதர்லாந்து, பூட்டான், ஸ்காட்லாந்து மற்றும் அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement