தங்கள் அணியில் இருந்து வெளியேறி புது கேப்டனாகிய பாண்டியாவுக்கு வாழ்த்து சொன்ன – மும்பை இந்தியன்ஸ்

Pandya-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனானது வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதால் தற்போது இறுதிகட்ட பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த சீசனில் விளையாடும் 8 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்த வேளையில் தற்போது அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளும் தங்களது அணியில் சேர்த்துள்ள 3 வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டது.

அதன்படி இந்த சீசனில் கூடுதலாக சேர்க்கப்பட்ட அகமதாபாத் அணியின் கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய ஹர்டிக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா, கைரன் பொல்லார்டு மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய நான்கு வீரர்கள் தக்க வைக்கப்பட்ட நிலையில் மற்ற வீரர்களை அந்த அணி வெளியேற்றியது.

- Advertisement -

இந்நிலையில் நீண்ட காலமாக மும்பை அணியின் நட்சத்திர வீரராக வெளிவந்த ஹர்திக் பாண்டியா வையும் அவர்கள் வெளியேறியிருந்தனர். அவரை தற்போது அகமதாபாத் 15 கோடி ரூபாய் கொடுத்து கேப்டனாகவும் மாற்றியுள்ளது. இந்நிலையில் தங்கள் அணியில் இருந்து வெளியேறிய நட்சத்திர வீரரான ஹர்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் அவர்களது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வாழ்த்தியுள்ளது.

அதன்படி அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் : ஹர்திக் பாண்டியாவின் புகைப்படத்தை பகிர்ந்த அவர்கள் “Good luck, 𝗞𝘂𝗻𝗴 𝗙𝘂 𝗣𝗮𝗻𝗱𝘆𝗮!, See you on the other side” என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் . மேலும் உங்களுடைய மறு பக்கத்தில் சந்திக்கிறோம் என்று ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் பகிர்ந்துள்ள அவர்களின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ரொம்ப நாள் ஆச்சு.. அதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம் – ரிஷப் பண்ட் ஓபன்டாக்

கடந்த சில ஆண்டுகளாகவே தனக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக பந்து வீசாமல் இருந்து வரும் பாண்டியா முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வரும் அவர் இந்த ஐபிஎல் தொடரில் இழந்த தனது பார்மை மீட்டெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement