ரொம்ப நாள் ஆச்சு.. அதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம் – ரிஷப் பண்ட் ஓபன்டாக்

Pant-3
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்ற வேளையில் இந்திய அணி நிர்ணயித்த 288 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி 48.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து பூர்த்தி செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரையும் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.

kohli 1

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிவடைந்த பின்னர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

முதல் போட்டியின்போது நாங்கள் சேசிங் செய்து இருந்தோம். ஆனால் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தோம். எனவே அவர்களுக்கு ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. மேலும் எங்களை விட தென் ஆப்பிரிக்க வீரர்கள் மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் சிறப்பான பாட்னர்ஷிப்கள் அமைத்ததே அவர்களின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்தது.

vanderdussen

எங்களால் அவர்களின் விக்கெட்டுகளை மிடில் ஓவர்களில் வீழ்த்த முடியவில்லை. அவர்களைப் பொறுத்த வரை அனைவருமே சிறப்பாக பந்து வீசினார்கள் என்று நினைப்பதாக ரிஷப் பண்ட் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணி இப்படி தோல்வியை சந்திக்க நாங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறோம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி மற்றும் டிராவிடை பின்னுக்கு தள்ளி மிகப்பெரிய சாதனையை படைத்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ

ஏனெனில் அண்மையில் நாங்கள் பெரிய அளவில் ஒருநாள் கிரிக்கெட் விளையாடவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறோம் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு அணியாக எப்போதும் எங்கள் ஆட்டத்தை மேம்படுத்தி ஆக வேண்டும். அந்த வகையில் இனி வரும் போட்டிகளில் இவற்றையெல்லாம் சரி செய்து சிறப்பாக வெற்றி பெறுவோம் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement