தோனி மற்றும் டிராவிடை பின்னுக்கு தள்ளி மிகப்பெரிய சாதனையை படைத்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ

Pant-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தென்னாப்பிரிக்க மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தோனி மற்றும் டிராவிட் ஆகியோரது சாதனையை கடந்து தனது பெயரை பதித்துள்ளார். அதன்படி நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

pant 1

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியானது சிறப்பான துவக்கத்தை பெற்றிருந்தாலும் அணியின் எண்ணிக்கை 63 ரன்கள் இருந்தபோது 29 ரன்கள் எடுத்திருந்த தவான் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து 64 ரன்கள் இருந்தபோது விராட் கோலியும் டக் ஆகி வெளியேறியதால் ராகுலுடன் இக்கட்டான வேளையில் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.

ராகுலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டும் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். ஒருபுறம் ராகுல் நிதானமாக ஆடினாலும், மறுபுறம் ரிஷப் பண்ட் தனது அசாத்தியமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 64 ரன்கள் இருந்தபோது ஜோடி சேர்ந்த அவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தனர்.

pant

சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 71 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர்கள் என 85 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் அவர் தென்னாப்பிரிக்க மண்ணில் (ஒரு போட்டியில்) அதிக ரன்களை அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : வரலாற்றில் அதிக முறை ஐசிசி கனவு அணிக்கு கேப்டனாக இருந்த கேப்டன்கள் யார்? – டாப் 4 கேப்டன்கள் இதோ

இதற்கு முன்னர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ராகுல் டிராவிட் 77 ரன்களும், தோனி 65 ரன்களும் குவித்து தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்தனர். அவர்களது இந்த ரன் குவிப்பை தாண்டி தற்போது ரிஷப் பண்ட் 85 ரன்கள் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement