வரலாற்றில் அதிக முறை ஐசிசி கனவு அணிக்கு கேப்டனாக இருந்த கேப்டன்கள் யார்? – டாப் 4 கேப்டன்கள் இதோ

Captains
- Advertisement -

2021 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கி தங்களது திறமையால் பல வெற்றிகளை தேடிக்கொடுத்த வீரர்களைக் கொண்ட கணவு அணியை ஐசிசி அண்மையில் வெளியிட்டது. அதில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்ட கனவு அணியை ஐசிசி அறிவித்தது. அந்த கனவு அணிகளில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கனவு அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பிடிக்காத நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான கனவு அணியில் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்தார்கள்.

IND

- Advertisement -

கனவு கேப்டன்கள்:
ஐசிசி அறிவித்துள்ள இந்த 3 வகையான கனவு கிரிக்கெட் அணிகளில் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியூசிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஒருநாள், டி20 அணிகளுக்கான கேப்டனாக பாகிஸ்தானின் பாபர் அசாம் இடம் பிடித்துள்ளார். ஒரு ஐசிசி கனவு அணியில் இடம் பிடிப்பதே பெரிய கவுரவமாகும். அதிலும் கேப்டனாக இடம் பிடித்தால் அது நிச்சயம் மிகப்பெரிய கௌரவமாகும். அந்த வகையில் வரலாற்றில் அதிக முறை ஐசிசி கனவு அணிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர்கள் பற்றி பார்ப்போம்:

4. அலெஸ்டர் குக் (3 அணிகள்) :
இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் அலெஸ்டர் குக் கடந்த 2018 ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் தலைமையில் இங்கிலாந்து குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சிறப்பு வாய்ந்த வெற்றிகளைப் பெற்றது. இவர் கடந்த 2013, 2015, 2016 ஆகிய 3 வருடங்களில் ஐசிசி அறிவித்த கனவு டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளதால் இந்த பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Ricky-Ponting

3. ரிக்கி பாண்டிங் (7 அணிகள்) :
உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் ரிக்கி பாண்டிங் 2003, 2007 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற ஒரே கேப்டன் ஆவார். அத்துடன் இவர் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா பல அபார வெற்றிகளை பெற்றது.

- Advertisement -

வரலாற்றின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் இவர் கடந்த 2004, 2007, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி கனவு ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருந்தார். 2004, 2005, 2007 ஆகிய ஆண்டுகளில் டெஸ்ட் அணிகளுக்கு கேப்டனாக இருந்த இவர் வரலாற்றில் மொத்தம் 7 ஐசிசி அணிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2. விராட் கோலி (8 அணிகள்):
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக விளங்கிய விராட் கோலி சமீபத்தில் அனைத்து விதமான கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இவர் தலைமையில் இந்தியா ஒரு ஐசிசி உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சரித்திர வெற்றிகளை பதிவு செய்தது.

- Advertisement -

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் 70 ஆண்டுகளில் முதல் முறையாக இவர் தலைமையில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது, அத்துடன் 2016 முதல் 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக விராட் கோலி தலைமையில் இந்தியா வெற்றி நடை போட்டது.

Kohli

இதன் காரணமாக 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஐசிசி கனவு டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்தார். அத்துடன் 2016, 2017, 2018, 2019 ஆகிய 4 ஆண்டுகளில் தொடர்ந்து ஐசிசி ஒரு நாள் கனவு அணிக்கு கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டார். அத்துடன் 2010 – 2019 வரையிலான தசாப்த கனவு டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் விராட் கோலி அறிவிக்கப்பட்டார். இதன் வாயிலாக மொத்தம் 8 ஐசிசி அணிகளுக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார்.

- Advertisement -

1. எம்எஸ் தோனி (9 அணிகள்) :
இந்தியா கண்ட மகத்தான கேப்டன்களில் மிகவும் முக்கியமானவரான எம்எஸ் தோனி இந்தியாவுக்காக 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என 3 வகையான ஐசிசி உலகக்கோப்பைகளையும் வென்று கொடுத்தவர். அத்துடன் கடந்த 2010 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக கொண்டு வந்தவர். இதன் வாயிலாக 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி அறிவித்த கனவு டெஸ்ட் அணியில் தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

Dhoni

அத்துடன் 2011 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஐசிசி உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வென்ற இவர் 2011, 2012, 2013, 2014 ஆகிய 4 தொடர்ச்சியான ஆண்டுகளில் ஐசிசி கனவு ஒருநாள் அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். இது மட்டுமல்லாமல் 2010 – 2019 வரையிலான தசாப்தத்தின் கனவு ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான கேப்டனாகவும் எம்எஸ் தோனி அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க : சூப்பர்ஸ்டார் பிளேயேர்ஸ் இல்லனாலும் இந்திய அணியை வீழ்த்த இதுவே காரணம் – தெம்பா பாவுமா பேட்டி

மொத்தத்தில் 9 ஐசிசி கனவு அணிகளில் கேப்டனாக இடம் பிடித்த எம்எஸ் தோனி வரலாற்றில் அதிக முறை ஐசிசி கனவு அணிக்கு கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Advertisement