சூப்பர்ஸ்டார் பிளேயேர்ஸ் இல்லனாலும் இந்திய அணியை வீழ்த்த இதுவே காரணம் – தெம்பா பாவுமா பேட்டி

Bavuma
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 85 ரன்களும், கேப்டன் ராகுல் 55 ரன்களையும் குவித்தனர். அதைத் தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 48.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 288 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

RSA

- Advertisement -

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சார்பாக துவக்க வீரர்கள் மலன் 91 ரன்களும், டிகாக் 78 ரன்களும் குவித்தனர். பின்னர் இறுதியில் மார்க்கம் மற்றும் வேண்டர்டுசைன் ஆகிய இருவரும் ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா பேசுகையில் :

வெற்றியுடன் இங்கு நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தொடரை நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று ஆரம்பத்திலேயே நினைத்தோம். அதன்படி இரண்டு போட்டியிலேயே இது நடந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இந்த தொடரின் வெற்றி மூலம் எங்களுக்கு நிறைய நம்பிக்கை கிடைத்துள்ளது. எப்போதுமே எங்கள் அணியின் மிக முக்கியமான வீரராக டி காக் திகழ்கிறார்.

pant4

இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் எங்கள் அணியை மற்றும் அணியில் உள்ள வீரர்களை நம்பியதுதான். ஏனெனில் தற்போது உள்ள அணியில் சூப்பர் ஸ்டார் பிளேயர்கள் இல்லை என்றாலும் எங்கள் அணியின் அனைத்து வீரர்களும் சேர்ந்து கொடுத்த ஒட்டுமொத்த அணியின் கூட்டு உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாக இதை நான் கருதுகிறேன். டெஸ்ட் தொடரை தொடர்ந்து தற்போது ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : அஹமதாபாத், லக்னோ அணிகள் செலக்ட் செய்துள்ள வீரர்கள் யார்? – கேப்டன் யார், எத்தனை கோடிகள்?

தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன்சி செய்வதை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். இந்த வெற்றியை அப்படியே மூன்றாவது போட்டியிலும் தொடர விரும்புகிறேன். 2 – 1 என்ற கணக்கை விட 3 – 0 என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்ற நாங்கள் ஆசைப்படுகிறோம் என தெம்பா பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement