இன்னும் கன்பார்ம் ஆகல.. கன்பார்ம் ஆனதும் செலிப்ரேட் பண்ணிக்கிறோம் – தெ.ஆ கேப்டன் தெம்பா பவுமா பேட்டி

Bavuma
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் போட்டியானது இன்று புனே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும், டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது. தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் குவிண்டன் டி காக் 114 ரன்களையும், மூன்றாவது வீரராக களமிறங்கிய வாண்டர் டுசைன் 133 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா சார்பாக சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதாக மகிழ்கிறேன். இந்த போட்டியில் டி காக் மற்றும் ராசி வேண்டர் டுசைன் ஆகியோர் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து எங்களுக்கு நல்ல ரன் குவிப்பிற்கு பெரிய அடித்தளத்தை அமைத்தனர்.

- Advertisement -

அதேபோன்று பந்து வீச்சிலும் எங்களது அணியின் பவுலர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். இந்த போட்டியின் ஆரம்பத்தில் டி காக் மைதானத்தின் தன்மையை சரியாக கணித்து அற்புதமாக விளையாடினார். சரியான பந்துகளுக்கு மரியாதை கொடுத்தும் தவறான பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டி அசத்தினார். இந்த போட்டியின் ஆரம்பத்தில் தனது இயல்பான அவர் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் நேரம் செல்ல செல்ல அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு எச்சரிக்கை.. 24 வருடம் கழித்து நியூசிலாந்தை தெறிக்க விட்ட தெ.ஆ.. மாபெரும் சாதனை வெற்றி

அதோடு 30 ஓவர்களை கடந்த பின்னர் எங்களது அணியின் ஹிட்டர்கள் எப்பொழுதுமே பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் செல்வார்கள் என்பதால் அதன்படியே இந்த போட்டியிலும் பெரிய ரன் குவிப்பை நோக்கி அழைத்துச் சென்றனர். தற்போதைக்கு எங்களது அரையறுதிக்கான வாய்ப்பு உறுதியாக உள்ளதா? என்பதை எங்களது அணியின் மேனேஜரை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என விரும்புகிறோம். எனவே தற்போது இந்த வெற்றியை கொண்டாட முடியாது ஆனால் நாங்கள் தற்போதே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ததாகவே நம்புகிறோம். எனவே நாளை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அதன்பிறகு அடுத்த போட்டிக்காக தயாராக உள்ளோம் என தெம்பா பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement