இந்தியாவுக்கு எச்சரிக்கை.. 24 வருடம் கழித்து நியூசிலாந்தை தெறிக்க விட்ட தெ.ஆ.. மாபெரும் சாதனை வெற்றி

RSA vs NZ 2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 1ஆம் தேதி மதியம் 2 மணிக்கு புனேவில் நடைபெற்ற 32வது லீக் போட்டியில் வலுவான தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற நியூசிலாந்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 24 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் அவுட்டானார். இருப்பினும் அடுத்ததாக வந்த ராசி வேன் டெர் டுஷனுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் குவிண்டன் டீ காக் சிறப்பாக விளையாடினார். நேரம் செல்ல செல்ல நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 40 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 200 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த போது டீ காக் சதமடித்து 10 பவுண்டரி 3 சிக்சருடன் 114 (116) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அவருடன் மறுபுறம் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டிய டுஷன் 9 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 113 (118) ரன்களில் அவுட்டானார். கடைசியில் டேவிட் மில்லர் தம்முடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 53 (30) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்ததால் 50 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 357/4 ரன்கள் எடுத்த நிலையில் சுமாராக செயல்பட்ட நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 358 என்ற கடினமான இலங்கை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வேயை 2 ரன்களில் அவுட்டாக்கிய மார்கோ யான்சென் அடுத்ததாக வந்த ரச்சின் ரவீந்தராவையும் 9 ரன்களில் பெவலியன் அனுப்பி வைத்தார். அதே போல மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த வில் எங் 33 ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்ததாக வந்த கேப்டன் டாம் லாதமும் 4 ரன்களில் ரபாடா வேகத்தில் நடையை கட்டினார்.

- Advertisement -

அதனால் 67/4 என தடுமாறிய நியூசிலாந்துக்கு கை கொடுக்க முயற்சித்த டார்ல் மிச்சேலும் 24 ரன்களில் அவுட்டாக மிட்சேல் சான்ட்னரும் 7 ரன்களில் அவுட்டானார். கடைசியில் கிளன் பிலிப்ஸ் அரை சதமடித்து 60 (50) ரன்கள் எடுத்து போராடியும் நியூசிலாந்தை 35.3 ஓவரில் ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சிலும் அசத்திய அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4, மார்கோ யான்சென் 3 விக்கெட்களை சாய்த்தனர்.

இதையும் படிங்க: அந்த தோல்வியை மறக்கல.. அதையே உத்வேகமா வெச்சு இந்தியாவை சாய்ப்போம்.. இலங்கை கோச் சவாலான பேட்டி

அதனால் 7 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்த தென்னாப்பிரிக்கா ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்தியாவை முந்தி முதலிடம் பிடித்து அடுத்த போட்டியில் உங்களை வீழ்த்த வருகிறோம் என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மேலும் 1999க்கு பின் முதல் முறையாக 24 வருடங்கள் கழித்து நியூசிலாந்தை உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்து அசத்தியுள்ளது. அது போக ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2017 வெலிங்டன் போட்டியில் 159 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும்.

Advertisement