எனக்கு சொல்ல வார்த்தை இல்ல.. அரையிறுதி தோல்விக்கு பிறகு மனமுடைந்த – தெ.ஆ கேப்டன் தெம்பா பவுமா

Bavuma
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியானது மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள வேளையில் இன்றைய இரண்டாவது போட்டியில் அரையிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதன்படி கொல்கத்தா நகரில் நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 212 ரன்கள் மட்டுமே குவிக்க பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இதுவரை தகுதி பெற முடியாமல் இருந்த தென்னாப்பிரிக்க அணி மீண்டும் ஒரு முறை அரையிறுதியில் தோல்வியை தழுவி இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறுகையில் : வார்த்தைகளால் இந்த தோல்வியை என்னால் விவரிக்க முடியவில்லை. முதலில் நான் ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இறுதிப் போட்டிக்கு செல்லும் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்றைய போட்டியில் அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர்.

அவர்களது செயல்பாடு அருமையாக இருந்ததாலே அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சரியான துவக்கத்தை பெறவில்லை அதனாலே தோல்வியை சந்தித்துள்ளோம். இந்த தொடர் முழுவதுமே நாங்கள் சிறப்பாக விளையாடியிருந்தாலும் ஒரு தரமான அணிக்கு எதிராக விளையாடும்போது இதுபோன்ற சரிவு ஏற்படுவது நடக்கக்கூடிய ஒன்றுதான்.

- Advertisement -

குறிப்பாக ஆரம்பத்திலேயே நாங்கள் 4 விக்கெட்டுகளை இழந்ததால் எங்களுக்கு சரியான முமென்ட்டம் கிடைக்கவில்லை. இருப்பினும் மில்லர் மற்றும் கிளாஸஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். கிளாஸன் இறுதிவரை விளையாட முடியாமல் போனது சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. நிச்சயம் இன்னும் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் எங்களால் வெற்றிக்காக போராடியிருக்க முடியும்.

இதையும் படிங்க : கண்டிப்பா பைனல் இப்படித்தான் இருக்கும். இப்போதே இந்திய அணியை நினைத்து பயத்தை வெளிக்காட்டிய – பேட் கம்மின்ஸ்

இந்த தொடரில் எங்களது அணியின் பலவீரர்கள் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி உள்ளனர். எப்போதுமே நாங்கள் ஒரு போராட்டமான கிரிக்கெட்டை அளித்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி. டிகாக் போன்ற ஒரு வீரர் எங்கள் அணியில் இருந்து விலகுவது கடினமாக தான் இருக்கிறது இருந்தாலும் அவர் தென்னாப்பிரிக்க அணியின் லெஜெண்டாக இந்த வடிவத்தில் இருந்து வெளியேறுகிறார் என தெம்பா பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement