கண்டிப்பா பைனல் இப்படித்தான் இருக்கும். இப்போதே இந்திய அணியை நினைத்து பயத்தை வெளிக்காட்டிய – பேட் கம்மின்ஸ்

Cummins
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையறுதி போட்டியானது நவம்பர் 16-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பாக டேவிட் மில்லர் 101 ரன்கள் குவித்து அசத்தினார். ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டை வீழ்த்தி அசத்தனர். பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றிக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : இந்த போட்டியில் டக் அவுட்டில் அமர்ந்திருப்பதை விட மைதானத்தில் நின்றது சற்று எளிதாக இருந்ததாக நினைக்கிறேன். ஆரம்பத்தில் இரண்டு மணி நேரம் சற்று கடினமாக இருந்தது. பின்னர் சிறப்பாக இலக்கை நோக்கி சென்றதாக நினைக்கிறேன். இந்த போட்டியில் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் முன்கூட்டியே ஓவர்களை வீசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

மேலும் இந்த போட்டியில் நிச்சயம் சுழற்பந்து வீச்சுக்கு சாதாகமாக இருக்கும் என்று ஏற்கனவே நான் கணித்தேன். அதேபோன்று இந்த மைதானத்தின் தன்மையை பொறுத்து முதலில் பந்து வீசுவதை நான் பெரிதாக நினைக்கவில்லை. இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாக ஃபீல்டிங் செய்துள்ளோம். ஆனால் இங்கு தொடரின் ஆரம்பத்தில் அதுபோன்று இல்லை இருப்பினும் இந்த போட்டியில் எங்களது பீல்டிங் மிகச் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

அதே போன்று ஜாஸ் இங்கிலீஷ் மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்தார். டிராவிஸ் ஹெட் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே கை கொடுத்தார். எங்களில் சிலர் இதற்கு முன்னதாகவே உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளோம். அதேபோன்று இன்னும் சிலர் டி20 உலக கோப்பையில் விளையாடியுள்ளோம். அதனால் இறுதிப்போட்டியை நினைத்து கவலை இல்லை.

இதையும் படிங்க : அந்த பிளான் ஏற்கனவே வெச்சுருந்தேன்.. நெனச்சு பாக்காத இந்தியாவை சந்திக்க வரோம்.. ஆட்டநாயகன் ஹெட் பேட்டி

இருப்பினும் இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மைதானம் முழுவதுமாக நிறைந்திருக்கும். அதேபோன்று நிச்சயம் மைதானம் முழுவதும் ஒரு சார்பாக இந்திய அணிக்கு மட்டுமே ஆதரவாக இருக்கும் என்று பாட் கம்மின்ஸ் வெளிப்படையாக தனது பயத்தை வெளி காட்டினார். மேலும் 2015 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் நான் விளையாடியது என் கரியரிலேயே மிகவும் சிறப்பான ஒன்று. இதன் பின்னர் நான் இந்தியாவில் உலகக்கோப்பை இறுதி போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது. ஆனால் தற்போது அந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருப்பதாக பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement