RSA vs WI : சத்தமின்றி இரண்டரை நாளில் முடிந்த டெஸ்ட், அதிரடியாக வென்றும் வரலாற்றில் மோசமான படைத்த தெ.ஆ கேப்டன் பவுமா

Advertisement

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. லண்டனில் நடைபெறப்போகும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெரும் வாய்ப்பு ஏற்கனவே இழந்து விட்ட இவ்விரு அணிகளும் தங்களது பலத்தை சோதிப்பதற்காக மோதும் இத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 28ஆம் தேதியன்று செஞ்சூரியனில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 342 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக 141 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல தொடக்கம் கொடுத்த டேன் எல்கர் 71 ரன்களும் ஐடன் மார்க்ரம் 18 பவுண்டரியுடன் சதமடித்து 115 ரன்களும் குவித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்காவின் அதிரடியான வேகப்பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 212 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் க்ரைக் ப்ரத்வெய்ட் 11, தக்நரேன் சந்தர்பால் 22, ப்ளாக்வுட் 37, கெய்ல் மேயர்ஸ் 18 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ரேமன் ரெய்ஃபர் 62 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

பரிதாப பவுமா:
அதை தொடர்ந்து 130 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவை தெறிக்க விடும் வகையில் பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் வெறும் 116 ரன்களுக்கு சுருட்டி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. டீன் எல்கர் 1, கீகன் பீட்டர்சன் 7, க்ளாஸென் 7 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக மீண்டும் ஐடன் மார்க்ரம் 47 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு காப்பாற்றினார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக கெமர் ரோச் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இறுதியில் 247 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியை அதை விட பட்டாசாக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா வெறும் 159 ரன்களுக்கு சுருட்டியது. கிரைக் ப்ரத்வெய்ட் 0, தக்நரேன் சந்தர்பால் 10, ரெய்பர் 8, ரோஸ்டன் சேஸ் 0, கெய்ல் மேயர்ஸ் 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக ஜெமிமா பிளாக்வுட் 79 ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார். அந்தளவுக்கு பந்து வீச்சில் மாஸ் காட்டிய தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

அதனால் 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று சொந்த மண்ணில் அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய ஐடன் மார்க்ரம் ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக இந்தியாவில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் பெரும்பாலான போட்டிகள் 3 நாட்களில் முடிந்ததற்கு இந்தியாவில் உள்ள சுமாரான பிட்ச்கள் காரணம் என்று நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன.

ஆனால் தென்னாபிரிக்காவில் வேகத்துக்கு சாதகமான இந்த பிட்ச்சால் இப்போட்டி பிப்ரவரி 28இல் துவங்கி மார்ச் 2ஆம் தேதிக்குள் அதாவது இரண்டரை நாட்களுக்குள் முடிந்தது. ஆனால் அதைப் பற்றி மைக்கேல் வாகன் போன்ற இந்தியாவை விமர்சிப்பவர்கள் சத்தமின்றி இருப்பது ஆச்சரியமாகும். அது ஒருபுறம் இருக்க கடந்த 6 மாதங்களில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட டீன் எல்கருக்கு பதில் தெம்பா பவுமா தென்ஆப்பிரிக்காவின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

- Advertisement -

ஆனால் ஏற்கனவே சமீப காலங்களில் தடுமாறி வரும் அவரை கேப்டனாக களமிறங்கிய இந்த முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் சில்வர் டக் அவுட்டாக்கிய அல்சாரி ஜோசப் 2வது இன்னிங்ஸில் கோல்டன் டக் அவுட்டாக்கினார். இதன் வாயிலாக தனது அறிமுக போட்டியிலேயே 2 இன்னிங்சிலும் டக் அவுட்டான முதல் தென்னாப்பிரிக்க கேப்டன் என்ற மோசமான பரிதாப சாதனையை படைத்துள்ள பவுமா வழக்கம் போல ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதையும் படிங்க:IND vs AUS : அவர் மட்டும் இருந்திருந்தா இந்தியாவுக்கு இந்த பரிதாப நிலை வந்திருக்காது – டேனிஷ் கனேரியா ஆதங்கம்

இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லர், பாகிஸ்தானின் ரசித் லதீப், வங்கதேசத்தின் ஹபீபுல் பசர் ஆகியோர் மட்டுமே கேப்டனாக தங்களது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே இதே போல் 2 இன்னிங்சிலும் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

Advertisement