ஹாட்ரிக் ஃபைனலுக்கு தகுதி பெறுமா? 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இந்தியாவின் முழு அட்டவணை இதோ

Jasprith Bumrah India
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளின் வருகையால் பெரும்பாலும் ட்ராவில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் ரசிகர்களிடம் மவுசு குறைந்து வந்தன. அதனால் நூற்றாண்டு பழமை வாய்ந்த கிரிக்கெட்டின் உயிர்நாடியாக கருதப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்பிக்க நினைத்த ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 போலவே கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் பிரத்தியேக உலக கோப்பையை அறிமுகப்படுத்தியது. அதனால் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தால் கோப்பை கிடையாது மாறாக 2 வருடங்களாக லீக் சுற்றில் விளையாடி புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து ஃபைனலில் வென்றால் தான் சாம்பியன் பட்டம் கொடுக்கப்படும் என்ற நிலைமை உருவானது.

- Advertisement -

அதன் காரணமாக சமீபத்தில் இங்கிலாந்தை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது போன்ற நிறைய போட்டிகள் பரபரப்பாக நடைபெறுவதால் தற்போது டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சரித்திர வெற்றி பெற்று லீக் சுற்றில் சக்கை போடு போட்டு புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா 2021 ஃபைனலில் வழக்கம் போல சொதப்பி நியூஸிலாந்திடம் தோற்றது.

ஹாட்ரிக் தகுதி பெறுமா:
இருப்பினும் மனம் தளராமல் அடுத்த தொடரில் போராடிய இந்தியாவுக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தலைமையில் அசத்தி புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்து தொடர்ந்து 2வது முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. ஆனால் மீண்டும் அதே இங்கிலாந்தில் நடைபெற்ற ஃபைனலில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் அஸ்வின் போன்றவரை கழற்றி விட்டு பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்தது.

IND vs AUS

அதனால் 2013க்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு சுக்குநூறாக உடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இருப்பினும் நடப்பு சாம்பியனாக இருந்த நியூசிலாந்து, சொந்த மண்ணில் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற பல நாடுகள் ஃபைனலுக்கு வருவதற்கே திணறும் நிலையில் இந்தியா மட்டுமே அடுத்தடுத்த ஃபைனலுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக சாதனை படைத்துள்ளது. எனவே விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை தரும் என்ற நம்பிக்கையுடன் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாட தயாராகும் இந்தியாவின் லீக் சுற்று அட்டவணை வெளியாகியுள்ளது.

- Advertisement -

1. பொதுவாக இந்த ஃபைனலுக்கு தகுதி பெற ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணில் 3 தொடர்களிலும் வெளிநாட்டு மண்ணில் 3 தொடர்களிலும் விளையாட வேண்டும். அந்த வகையில் முதலாவதாக வரும் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா களமிறங்குகிறது. ஜூலை 12ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரின் 2 போட்டிகளும் டாமினிகா மற்றும் ட்ரினிடாட் நகரில் நடைபெற உள்ளது.

IND vs WI Nicholas Pooran Rohit Sharma

2. அதை தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கு முன் அந்நாட்டில் வரலாற்றில் ஒரு முறை கூட இந்தியா வென்றதில்லை என்பதால் இது சவாலான தொடராகும்.

- Advertisement -

3. அதன் பின் 2024 ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக தனது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா களமிறங்குகிறது.

4. அதைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் – அக்டோபர் மாதம் அண்டை நாடான வங்கதேசத்துக்கு எதிராக தன்னுடைய சொந்த மண்ணில் இந்தியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

IND-vs-AUS

5. அது போக 2024 அக்டோபர் நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா களமிறங்க உள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவுக்காக நீங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடனும் – நட்சத்திர வீரருக்கு சௌரவ் கங்குலி அழைப்பு

6. இறுதியாக வலுவான ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 2024 நவம்பர் – 2025 ஜனவரி வரை வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்குகிறது. 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா இம்முறை முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட சவாலான டெஸ்ட் தொடரில் எதிர்கொள்ள உள்ளது.

Advertisement