இந்தியாவுக்காக நீங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடனும் – நட்சத்திர வீரருக்கு சௌரவ் கங்குலி அழைப்பு

Ganguly
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதனால் 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா வெறும் கையுடன் நாடு திரும்பியது. இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டம் கிடைக்கும் அதை சரியாக பயன்படுத்தாத ரோகித் சர்மா ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் உலகின் நம்பர் ஒன் பவுலரான அஸ்வினை தேர்ந்தெடுக்காதது தோல்விக்கு காரணமானது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

- Advertisement -

மேலும் விராட் கோலி, புஜாரா மற்றும் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் நட்சத்திர வீரர்கள் அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியதும் தோல்வியை கொடுத்தது. முன்னதாக கடந்த வருடம் இதே போல இருதரப்பு தொடர்களில் அசத்தி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தும் முக்கியமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு சொதப்பலாக செயல்பட்ட சீனியர் வீரர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர்.

கங்குலி கோரிக்கை:
அதன் காரணமாக அதிருப்தியடைந்துள்ள ரசிகர்கள் இவர்களை வைத்துக் கொண்டு எப்போதும் கோப்பையை வெல்ல முடியாது என்று கொந்தளிப்பதுடன் டி20 கிரிக்கெட்டை போலவே புதிய கேப்டன் தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில் இந்த ஒரு தோல்வியால் இந்தியாவை குறைக்கும் மதிப்பிட வேண்டாம் என்று தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி டெஸ்ட் அணியில் தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வரும் 4வது பவுலர் இடத்திற்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

Ganguly

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “வெறும் ஒரு போட்டியில் சந்தித்த தோல்வியை வைத்து நாம் முடிவுக்கு வந்து விடக்கூடாது. இந்தியாவில் எப்போதும் சிறப்பான திறமை இருக்கிறது. அதே சமயம் நான் திடீரென விராட் கோலி அல்லது புஜாரா ஆகியோரை தாண்டி இந்திய அணியை பார்க்க விரும்பவில்லை. குறிப்பாக விராட் வெறும் 34 வயதை மட்டுமே நிரம்பியுள்ளார். அதே சமயம் இந்தியாவுக்கு விளையாட ஏராளமான வீரர்கள் தயாராக இருக்கின்றனர். அதற்கு சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வீரர்களை நாம் பார்க்க வேண்டும்”

- Advertisement -

“டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் தொடரை அடிப்படையாக வைத்து தேர்வு செய்யக்கூடாது. எனவே உள்ளூர் தொடர்களில் மட்டுமே நீங்கள் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஜெய்ஸ்வால் அல்லது படிதார், பெங்கால் அணியில் விளையாடும் அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்கள் நிறைய ரன்களை அடித்துள்ளனர். சுப்மன் கில், ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் மிகவும் இளமையானவர்கள். அதை விட என்னுடைய கருத்தை ஹர்திக் பாண்டியா கேட்பார் என்று நம்புகிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பாக இங்கிலாந்து போன்ற கால சூழ்நிலைகளில் இந்தியாவுக்காக கண்டிப்பாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

pandya 2

அவர் கூறுவது போல 2016இல் அறிமுகமாகி 2018இல் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய ஹர்திக் பாண்டியா இதே இங்கிலாந்தின் நாட்டிங்கம் நகரில் நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட்களை எடுத்து வெற்றியில் பங்காற்றி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று விமர்சித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் கருத்தை பொய்யாக்கினார்.

இதையும் படிங்க:நீங்க விதைச்ச பிட்ச் வினை தான் ஃபைனலில் தோற்க காரணம் – இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்த ஹர்பஜன் சிங்

அதனால் கபில் தேவுக்கு பின் தரமான ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்களும் மகிழ்ந்த நிலையில் அதன் பின் காயத்தை சந்தித்து வெளியேறிய பாண்டியா 2022 ஐபிஎல் கோப்பையை வென்று மீண்டும் வெள்ளைப்பந்து அணியில் கம்பேக் கொடுத்து தற்போது ரோகித் சர்மாவுக்கு பின் அடுத்த கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார். ஆனால் பணத்துக்காக வெள்ளைப்பந்து மற்றும் ஐபிஎல் போன்ற டி20 தொடரில் விளையாடினால் போதும் என்று கருதும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை என ஏற்கனவே மறைமுகமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement