இது வேறயா? அப்டினா 2023 உ.கோ ஜெயிக்கிறது கஷ்டம் தான் – மோசமான பட்டியலில் உலக அளவில் 9வது இடத்தில் தவிக்கும் இந்தியா

India World Cup 2
Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் 1 புள்ளியை மட்டுமே பெற்ற இந்தியா நேபாளுக்கு எதிரான 2வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று மொத்தம் 3 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றாலும் இந்தியா மீது நிறைய ரசிகர்கள் அதிருப்தியையே வெளிப்படுத்தினார்கள். ஏனெனில் கத்துக்குட்டியாக கருதப்படும் நேபாளை இந்திய பவுலர்கள் தெறிக்கவிடும் அளவுக்கு பந்து வீசி 100 – 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் ஆரம்ப முதலே சராசரியான பவுலிங்கை வெளிப்படுத்திய இந்தியாவை திறம்பட எதிர்கொண்ட நேபாள் 49 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 230 ரன்கள் எடுத்தது. இருப்பினும் இதே தொடரில் 342 ரன்களை துரத்திய நேபாளை தங்களுடைய மிரட்டலான பந்து வீச்சால் ஓடவிட்ட பாகிஸ்தான் 104 ரன்களுக்கு சுருட்டி 238 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அந்த வகையில் இந்தியாவின் பவுலிங் சுமாராகவே இருப்பதாக தெரிவித்த ரசிகர்கள் 2023 உலகக்கோப்பையில் என்ன செய்யப் போகிறார்களோ என்ற ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

9வது இடத்தில் இந்தியா:
அதை விட அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவுக்கு முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஆரம்பத்திலேயே முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு நேபாள் துவக்க வீரர்களை கேட்ச் கொடுக்க வைத்தனர். ஆனால் அவர்கள் கொடுத்த அல்வா போன்ற கேட்ச்களை ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, இசான் கிசான் ஆகியோர் கோட்டை விட்டது தான் கடைசியில் நேபாள் 230 ரன்கள் அடிப்பதற்கு அடித்தளமாக அமைந்தது.

அப்படி முதல் 20 பந்துகளில் 3 எளிதான கேட்ச்களை இந்திய வீரர்கள் விடுவது இப்போட்டி மட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களாகவே தொடர்கதையாகி வருகிறது. அதற்கான புள்ளிவிவரத்தை புரட்டிப் பார்த்தால் கடந்த 2019 உலகக்கோப்பைக்கு பின் துல்லியமாக அல்லது கேட்ச்களை தவற விடாமல் அதிகமாக பிடித்த அணிகளின் டாப் 10 பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் திண்டாடுவது தெரியவந்துள்ளது.
குறிப்பாக இந்திய அணி வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் கேட்ச்களில் 75.1% மட்டுமே பிடித்து எஞ்சிய 24.9% கேட்ச்களை கோட்டை விட்டு வருகிறார்கள்.

- Advertisement -

அந்த விரிவான பட்டியல் இதோ:
1. இங்கிலாந்து : 82.8%
2. பாகிஸ்தான் : 81.6%
3. நியூசிலாந்து : 80.9%
4. இலங்கை : 78.8%
5. ஆஸ்திரேலியா : 78.5%
6. வெஸ்ட் இண்டீஸ் : 77.9%
7. வங்கதேசம் : 75.8%
8. தென்னாப்பிரிக்கா : 75.6%
9. இந்தியா : 75.1%
10. ஆப்கானிஸ்தான் : 71.2%

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆகட்டிவா இருந்துட்டா போதுமா? விராட் கோலியையே ஓப்பனாக விமர்சித்த கைப் – காரணம் இதோ

பொதுவாகவே கேட்ச்ஸ் வின் மேட்ச்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதிலும் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஹெர்ஸ் கிப்ஸ் விட்ட மார்க் வாக் கேட்ச் 1999 சாம்பியன் பட்டத்தை தென்னாப்பிரிக்காவிடம் இருந்து ஆஸ்திரேலியா பறிக்கும் அளவுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அந்த நிலையில் பேட்டிங்கில் இடது கை பவுலர்களுக்கு எதிராக தடுமாறும் பலவீனத்தையும் பந்து வீச்சில் சுமாராக செயல்படும் பலவீனத்தையும் கொண்டுள்ள இந்தியா கேட்ச் பிடிக்கும் பிடிப்பதிலும் குறையைக் கொண்டிருப்பதால் 2023 உலகக் கோப்பையை வெல்லுமா என்பது ரசிகர்களுக்கு சந்தேகமாகவே இருக்கிறது.

Advertisement