இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆகட்டிவா இருந்துட்டா போதுமா? விராட் கோலியையே ஓப்பனாக விமர்சித்த கைப் – காரணம் இதோ

Mohammed kaif
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலும் நேபாளுக்கு எதிரான 2வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இருப்பினும் நேபாளுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற போதிலும் நிறைய ரசிகர்கள் இந்தியாவின் செயல்பாடுகள் மீது அதிருப்தியை தான் வெளிப்படுத்தினார்கள். ஏனெனில் கத்துக்குட்டியாக கருதப்படும் நேபாளை டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்த இந்தியா 150 ரன்களுக்குள் சுருட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பந்து வீச்சில் சராசரியாகவே செயல்பட்ட இந்தியா 48.1 ஓவர்கள் போராடி தான் ஒரு வழியாக நேபாளை 230 ரன்களுக்கு சுருட்டியது.

மறுபுறம் இதே தொடரில் பாகிஸ்தான் அனல் தெறிக்க பந்து வீசி நேபாளை 104 ரன்களுக்கு சுருட்டி 238 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அதனால் இந்தியாவின் பவுலிங் சுமாராகவே இருப்பதாக தெரிவித்த ரசிகர்கள் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இடது கை பவுலர்களுக்கு எதிராக ரோஹித், விராட் போன்றவர்கள் திண்டாடியதும் அம்பலாமானதால் 2023 உலகக்கோப்பையை வெல்வது கடினம் என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -

கைப் விமர்சனம்:
அதை விட அந்த போட்டியில் முதல் 20 பந்துகளில் நேபாள் துவக்க வீரர்கள் கொடுத்த 3 அல்வா கேட்ச்களை ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி தவற விட்டதே இந்திய பவுலர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. அதிலும் இந்திய அணியில் மிகவும் ஃபிட்டான வீரராகவும் நம்பர் ஒன் ஃபீல்டராகவும் அறியப்படும் விராட் கோலி கேட்ச்சை நழுவ விட்டது பலரால் நம்ப முடியாததாக இருந்தது. இந்நிலையில் இப்போது மட்டுமல்லாமல் பலமுறை முக்கிய தருணங்களில் விராட் கோலி கேட்ச் விட்டதை பார்த்துள்ளதாக தெரிவிக்கும் முகமது கைஃப் இந்திய வீரர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டும் சுறுசுறுப்பை களத்திலும் காட்ட வேண்டுமென கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் அணியில் ஃபிட்டாக இருப்பது மட்டும் முக்கியமல்ல. அதே போல சிக்ஸ் பேக் உடலுடன் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சிகளை செய்து அதை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுவது எந்த வித்தியாசமும் ஏற்படுத்தாது. எனவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பது போல் இங்கேயும் இருங்கள். அப்போட்டியில் விராட் கோலி மீது நான் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தேன்”

- Advertisement -

“நான் பொய் சொல்ல விரும்பவில்லை. விராட் கோலி கேட்ச் விடுவது இது முதல் முறையல்ல. முக்கிய தருணங்களில் அவர் கேட்ச் விடுவதை நான் பலமுறை பார்த்துள்ளேன். குறிப்பாக ஐபிஎல் தொடரிலும் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசத்திலும் அவர் கேட்ச்களை விட்டுள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களில் விராட் கோலியின் பயணம் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக அவருடைய ஃபிட்னஸ் அற்புதமாக இருக்கிறது”

இதையும் படிங்க: இந்திய நாட்டின் பெயர் மாறப்போவதை 3 நாட்கள் முன்பே கணித்த சேவாக் – ஜெய் ஷா’விடம் அடுக்கடுக்கான கோரிக்கை

“ஆனால் அதை நீங்கள் களத்தில் காட்டவில்லை என்றால் எந்த பயனுமில்லை. இது ஸ்ரேயாஸ் அல்லது இஷான் ஆகிய அனைவருக்கும் பொருந்தும். குறிப்பாக பந்து வருவதற்கு முன்பாகவே இஷான் கிசான் முன்னோக்கி ஓடினார். பொதுவாக நீங்கள் பந்து சற்று முன்னோக்கி இருக்குமாறு வரும் போது கவனத்துடன் பார்த்து பிடிக்க வேண்டும். மொத்தத்தில் ஃபிட்டான அணி என்று சொல்லுங்க நீங்கள் இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது” என்று கூறினார்.

Advertisement