இந்திய நாட்டின் பெயர் மாறப்போவதை 3 நாட்கள் முன்பே கணித்த சேவாக் – ஜெய் ஷா’விடம் அடுக்கடுக்கான கோரிக்கை

- Advertisement -

இந்திய திருநாட்டின் பெயர் இந்தியா என்பதிலிருந்து பாரதம் என்று மாறப்போவதாக தற்போது செய்திகள் வைரலாகி வருகின்றன. ஆசிய கண்டத்தில் 3 பக்கம் கடல்கள் சூழ வடக்கே இமயமலை பாதுகாப்பாக நிற்க அனைத்து வளங்களும் திறமைகளும் தன்னகத்தே கொண்ட இந்தியா பல்வேறு இதமான மொழி பேசும் மக்களுடன் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக திகழ்ந்து வருகிறது. மேலும் பொருளாதாரத்திலும் சரி மக்கள் தொகையிலும் சரி சமீபத்தில் நிலவின் தென் துருவத்தில் செயற்கைக்கோள் அனுப்பியதிலும் சரி இந்த உலகில் எப்போதுமே தனித்துவம் கொண்ட நாடாக இருக்கும் இந்தியா பல திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் தேசமாக திகழ்கிறது.

இந்நிலையில் இந்தியா எனும் பெயர் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த போது பிரிட்டிஷ்காரர்கள் வழங்கியது என்று கருதும் இந்திய அரசு அதை “பாரத் அதாவது பாரதம்” என்று மாற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரும் செப்டம்பர் 18ஆம் தேதி துவங்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் வாயிலாக இந்த புதிய பெயர் பாரத தாய் நாட்டுக்கு சூட்டப்பட உள்ளதாகவும் செய்திகள் வலம் வருகின்றன.

- Advertisement -

கணித்த சேவாக்:
இருப்பினும் இது பற்றி அதிகாரப்பூர்வ செய்திகள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் குடியரசு தலைவர் தம்முடைய அறிக்கை தாள்களில் “பாரதத்தின் குடியரசு தலைவர்” என்று மாற்றம் செய்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது அதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. அந்த நிலையில் இந்தியாவின் பெயர் மாற்றம் செய்யப்படுவதை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய கோப்பை போட்டியின் போதே முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தம்முடைய டுவிட்டர் பக்கத்தில் கணித்ததை ஒரு ரசிகர் புகைப்படம் எடுத்து வியப்புடன் பாராட்டியுள்ளார்.

அதாவது அப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை “காபி மற்றும் பக்கோடா சாப்பிடும் இடத்தில் ஏன் ஆசிய கோப்பையை வைத்தீர்கள்” என பதிவிட்டு கலாய்த்த வீரேந்திர சேவாக் கடைசியில் பாரத் – பாகிஸ்தான் என்ற ஹேஸ்டேக்கையும் சேர்த்து பதிவிட்டிருந்தார். அதை பார்த்த வியந்த ரசிகர் இந்த செய்தி நம் அனைவருக்கும் முன்பாகவே சேவாக்கிற்கு தெரிந்திருக்கிறது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதற்கு ஆம் என்று ஒப்புக்கொண்டுள்ள சேவாக் ஆங்கிலேயர்கள் கொடுத்த இந்தியா எனும் பெயரை அகற்றி விட்டு பாரத் எனும் பெயரை பயன்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டதாக தற்போது புதிதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் 2023 உலக கோப்பையில் இந்திய வீரர்கள் பாரத் எனும் பெயரை நெஞ்சங்களில் சுமந்து விளையாட வேண்டும் என்றும் அவர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா’க்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: தங்களது 2023 உ.கோ அணியை அறிவித்த தெ.ஆ – அடுத்த நிமிடமே திடீர் ஓய்வை அறிவித்த 30 வயது நட்சத்திர வீரர், ரசிகர்கள் சோகம்

மேலும் 1996 உலகக் கோப்பையில் நெதர்லாந்து தங்களுடைய உண்மையான பெயரான ஹோலண்ட் என்ற அடையாளத்துடன் விளையாடியதாக கூறும் அவர் ஆங்கிலேயர்கள் கொடுத்த பெயரை அகற்றிய பர்மா தற்போது மயான்மர் என்று பழைய பெயரை மாற்றம் செய்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். அது போக 2023 உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அணியை இந்திய அணி என்று சொல்லாமல் பாரத் கிரிக்கெட் அணி என அழைக்குமாறும் அவர் ஜெய் ஷா மற்றும் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். எனவே 2023 உலக கோப்பையில் நாம் பாரத் எனும் பெயருடைய ஜெர்சியை அணிந்தே விளையாட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement