என்னோட முதல் அறிமுக போட்டியிலேயே அவரை மாதிரி ஒரு பிளேயரை வீழ்த்தியது கனவு மாதிரி இருக்கு – வங்கதேச வீரர் நெகிழ்ச்சி

Tanzim-Hasan
Advertisement

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக தற்போது ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஆசிய கோப்பை தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. ஏனெனில் ஆசிய கண்டத்தை சேர்ந்த ஆறு முக்கிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்ற விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இவ்வேளையில் ஏற்கனவே இந்த தொடரில் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ள வேளையில் இந்த தொடரின் கடைசி சூப்பர் போர் போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி இந்திய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது பங்களாதேஷ் அணி சார்பாக அறிமுக வீரராக களமிறங்கிய தன்சிம் ஹசன் பேட்டிங்கில் 8 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 14 ரன்கள் குவித்ததோடு மட்டுமின்றி பந்துவீச்சின் போது 7.5 ஓவர்களை வீசி ஒரு மெய்டன் உட்பட 32 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அறிமுக போட்டியிலேயே இப்படி இந்திய அணிக்கு எதிராக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் ஜொலித்த அவரது ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ள வேளையில் இந்திய அணிக்கு எதிரான தனது சிறப்பான செயல்பாடு குறித்து அவரே போட்டி முடிந்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

என்னுடைய சர்வதேச கிரிக்கெட்டின் அறிமுக போட்டியில் முதல் விக்கெட்டாக ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியதை நான் கனவாக நினைக்கிறேன். என்னுடைய லைன் மற்றும் லென்த்திலேயே நான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய ஃபோக்கஸ் எல்லாம் என்னுடைய பந்துவீச்சின் மீது மட்டுமே இருப்பதால் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது. அதோடு எனது அணி நான் தொடர்ச்சியாக ஓவர்களை வீச வேண்டும் என்று விருப்பப்பட்டால் அதற்கு ஏற்றார் போல் பந்துவீச தயாராக காத்திருக்கிறேன்.

இதையும் படிங்க : இந்த மேட்ச் போதும் நாங்க எவ்ளோ டேஞ்சர்னு புரிஞ்சிருக்கும். இந்திய அணியை வீழ்த்திய பின்னர் – ஷாகிப் அல் ஹசன் பேட்டி

மேலும் இந்த போட்டியில் கடைசி ஓவர் வீசும் போது மிகவும் கடினமான சூழ்நிலை இருந்தது. ஏனெனில் கடைசி இரண்டு பந்துகளுக்கு எட்டு ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையின் போது ஆட்டம் இரு அணிகளுக்குமே சரிசமமாக இருந்ததாகவே நினைத்தேன். அதன் காரணமாகவே இறுதியில் யார்க்கர் பந்துகளை வீச வேண்டும் என்று முயற்சி செய்து சிறப்பாக பந்துவீசி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என தன்சிம் ஹசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement