இந்த மேட்ச் போதும் நாங்க எவ்ளோ டேஞ்சர்னு புரிஞ்சிருக்கும். இந்திய அணியை வீழ்த்திய பின்னர் – ஷாகிப் அல் ஹசன் பேட்டி

Shakib
- Advertisement -

இலங்கை நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான சூப்பர் போர் சுற்றின் ஆறாவது போட்டியானது கொழும்பு மைதானத்தில் நேற்று செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய நிலையில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியை பங்களாதேஷ் அணி சோதித்துப் பார்த்தாலும் இந்திய அணி ஏற்கனவே இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பினை உறுதி செய்ததால் பங்களாதேஷ் அணி ஆறுதல் வெற்றியுடன் இந்த தொடரில் இருந்து விடை பெற்றது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கட்டுகளை இழந்து 265 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 266 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தாலும் சுப்மன் கில்லின் சதம் மற்றும் அக்சர் பட்டேலின் சிறப்பான ஆட்டம் காரணமாக வெற்றியின் அருகில் வரை வந்து இறுதியில் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 259 மட்டுமே குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டனும், ஆட்டநாயகனுமான ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் சில வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்க நினைத்தோம். அந்த வகையிலேயே இந்த போட்டிக்கான எங்களது அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.

- Advertisement -

அதேபோன்று கடந்த இரண்டு ஆட்டங்களாக நாங்கள் இங்கு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். இந்த போட்டியிடம் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த போட்டியில் நான் முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறங்க காரணம் யாதெனில் : இந்த சவாலான மைதானத்தில் நான் சிறிது நேரம் நின்று விளையாட விருப்பப்பட்டேன். அந்த வகையில் பந்து பழையதாக என்னுடைய பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க : பங்களாதேஷ் கிட்ட இதனால தான் தோத்துட்டோம்னு தப்பா நெனச்சிக்காதீங்க. தோல்விக்கு பின் மன்னிப்பு கேட்ட – ரோஹித் சர்மா

அதேபோன்று மெஹதி ஹாசனும் இந்த போட்டியில் முக்கியமான நேரத்தில் பந்துவீசி சில திருப்புமுனைகளை ஏற்படுத்திக் கொடுத்தார். அவர் வீசிய ஐந்து ஓவர்கள் கடைசி கட்டத்தில் வந்தவை, இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் பந்துவீசுவது என்பது எளிதான விஷயம் கிடையாது. அதே மாதிரி தன்சீமும் மிகச் சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மொத்தமாக ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை தொடரில் நாங்கள் ஒரு ஆபத்தான அணி என்பதை அனைவருமே புரிந்து கொள்வார்கள் என்று தான் நினைப்பதாக ஷாகிப் அல் ஹசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement